தான் இனி அதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிக்கப்போவதில்லை என நடிகர் விஜய் சேதுபதி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழின் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் அடுத்ததாக மெரி கிறிஸ்துமஸ் படம் வருகின்ற 12-ம் தேதி வெளியாகிறது.
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில், விஜய் சேதுபதியுடன் இணைந்து கத்ரீனா கைஃப் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ” வில்லன் மற்றும் கவுரவ வேடங்களில் என்னை நடிக்க வைக்க நினைப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது.
கவுரவ வேடங்களில் நாம் நடிப்பதால் அந்த படத்துக்கு ஒரு கவனம் கிடைக்கிறது என முன்பு எனக்கு ஒரு பார்வை இருந்தது.
ஒருகட்டத்தில் நான் ஹீரோவாக நடிக்கிற படங்களின் வியாபாரத்தையே அது பாதிக்கிறது. வில்லனாக நடித்தாலும் அது வழக்கமான வில்லன் கதாபாத்திரத்தை நோக்கியே போகிறது.
எல்லாவற்றுக்கும் நேரம் ஒதுக்க இயலவில்லை. அதனால் இனி கவுரவ மற்றும் வில்லன் வேடங்களில் நடிப்பதில்லை என முடிவு செய்து விட்டேன்,” என தெரிவித்து உள்ளார்.
கடைசியாக ஷாருக்கானுக்கு வில்லனாக, ஜவான் படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…