தமிழ்சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் காலம் தொடங்கி இன்றுவரை 25, 50,75,100 வது படங்கள் வெற்றி என்பதை நடிகர்கள் கெளரவமாக கருதி வருகின்றனர்.
ஆனால் அப்படியொரு வெற்றியை இதுவரை நடிகர் விஜய்காந்த் நடிப்பில் வெளியான படங்கள் மட்டுமே பெற்றிருக்கிறது.
அந்த வரிசையில் விஜய் சேதுபதி நடிப்பில் ஜூன் 14 அன்று வெளியாகும் மகாராஜா நிகழ்த்துமா என்பதை தமிழ் சினிமா வட்டாரம் எதிர்பார்த்து காத்திருக்கிறது.
தி ரூட்’ நிறுவனத்துடன் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மகாராஜா’.
விஜய்சேதுபதி நடிப்பில் தயாராகும் ஐம்பதாவது படமாகும். ‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் எழுதி இயக்கியுள்ளார்.
இதில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்டிநட்ராஜ், முனிஸ்காந்த், சிங்கம்புலி, பார ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன் விஜய் சேதுபதி தொடக்க காலத்தில் வேலை செய்த துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவில் ஒளிபரப்பபட்டது.
ஜூன் 14 அன்று படம் வெளியாவதையொட்டி படக்குழுவினர் நேற்று (ஜூன் 9) பத்திரிக்கையாளர்களை சென்னையில் சந்தித்தனர்.
நிகழ்வில் பங்கேற்று பேசிய நடிகர் விஜய் சேதுபதி,
இந்தியாவின் மிகப்பெரும் படப்பிடிப்பு வளாகமாக இருக்கும் ராமோஜி ராவ் திரைப்பட படப்பிடிப்பு வளாகத்தை அமைத்த ராமோஜிராவ் மறைவுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவருக்குத் தலை வணங்குகிறேன் என்றவர்,
படம் பற்றி கூறுகிறபோது, “என்னுடைய ஐம்பதாவது படமாக ‘மகாராஜா’ அமைந்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஐம்பதாவது படம் வரை வந்திருக்கிறேன் என்றால் என் இயக்குநர்கள், மீடியா என எல்லோரும் தந்த திட்டும் பாராட்டும்தான் காரணம்.
இந்தப் படமும் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” நான் பேசுவதை காட்டிலும் மகாராஜா படம் எல்லாவற்றையும் பேசும் என்றவரிடம் கடைசி விவசாயி படத்தில் ஆன்மீகவாதியாக, சாமியாராக நடித்தது பற்றி கேள்வி எழுப்பபட்டது.
“ஆன்மீகத்தை உணரும் பக்குவத்திற்கு நான் இன்னும் வரவில்லை, இயக்குநர் சொல்வதை ஒரு நடிகனாக நான் செய்கிறேன். அதனை எனது தனிப்பட்ட விருப்பம் என கூற முடியாது.
கடைசி விவசாயி படத்தில் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்க நான் ரெம்ப மெனக்கெட வேண்டியிருந்தது” என்றார்.
அரண்மனை, ஸ்டார், கருடன் திரைப்படங்களை தொடர்ந்து திரையரங்குகள் வணிக ரீதியாக எதிர்பார்க்கும் படமாக’ மகாராஜா’ திரைப்படம் உள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகும் 50வது படம் என்பதால் படத்தை வெற்றி பெற வைக்க படக்குழு தரப்பில் மட்டுமல்லாது, விஜய் சேதுபதி தரப்பிலும் தீவிரமான புரமோஷன் வேலைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
காலை வெட்டிகொண்ட அதிமுக தொண்டர்: போன் போட்ட சசிகலா… நேரில் சந்தித்த எடப்பாடி
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!
புதிய அமைச்சரவையில் தென் மாநில அமைச்சர்களின் லிஸ்ட்… கூட்டணி கட்சி அமைச்சர்கள் யார் யார்?
குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?