நடிகை கீர்த்தி ஷெட்டியுடன் கதாநாயகனாக நடிக்க மறுப்பதற்கு இதுதான் காரணம் என விஜய்சேதுபதி விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி பல படங்களில் தற்போது பிசியாக நடித்து வருகிறார். இதில், விஜய்சேதுபதி நடிக்கும் ‘மகாராஜா’ படத்தின் படபிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது விஜய்சேதுபதியின் 50 -வது படமாகும்.
குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்கின்றனர்.
அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் புரொமோசன் பணியின்போது பேசிய விஜய் சேதுபதி கீர்த்தி ஷெட்டியுடன் நடிக்க மறுப்பது ஏன்? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய விஜய்சேதுபதி, “டிஎஸ்பி படத்தில் கீர்த்தி ஷெட்டிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை நான் மறுத்துவிட்டேன். ஏனென்றால், உப்பெனா படத்தில் நான் அவருக்கு அப்பாவாக நடித்தேன்.
நாங்கள் படப்பிடிப்பில் இருக்கும்போது என்னை அவருடைய உண்மையான தந்தையாக நினைக்கும்படி அவரிடம் கூறினேன். அவர் என் மகனை விட சற்று மூத்தவர். எனவே, அவருடன் என்னால் நடிக்க முடியாது என்று கூறினேன்.” என்றார்.
பின்னர் டிஎஸ்பி படத்தில் கீர்த்தி ஷெட்டிக்கு பதிலாக அனுகிரீத்தி வாஸ் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அண்ணாமலை தோல்வியால் மொட்டையடித்த பாஜக நிர்வாகி : வனத்துறை விசாரணை
INDvsPAK : “இந்தியா பெரிய தவறு செய்கிறது” : பாக். முன்னாள் வீரர் எச்சரிக்கை!