விஜய் சேதுபதி, யோகி பாபு நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று (மே 20) மலேசியாவில் பூஜையுடன் தொடங்கியது.
விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் இணைந்து நடித்த படம் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’. இப்படத்தை பி.ஆறுமுக குமார் இயக்கியிருந்தார்.
இந்த நிலையில் பி.ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகும் ஒரு புதிய படத்தில் மீண்டும் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் தொடக்க விழா மலேசியா நாட்டின் ஈப்போ நகரில் மே 19 அன்று நடைபெற்றது.
இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் யோகி பாபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும் ருக்மணி வசந்த், பி.எஸ்.அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.
ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த படத்தை 7 சிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
இராமானுஜம்
PBKS vs RR: பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்த ராஜஸ்தான்
காதல், அன்பு, பக்தி… வித்தியாசம் என்ன?