அந்தாதூன் பட இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை கத்ரீனா கைஃப் இணைந்து நடித்துள்ள படம் மெரி கிறிஸ்துமஸ்.
இந்த படம் ஹிந்தி, தமிழ் என இரு மொழிகளில் Bilingual படமாக உருவாக்கியுள்ளது. ராதிகா சரத்குமார், சஞ்சய் கபூர், டினு ஆனந்த் உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகை ராதிகா ஆப்தே இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.
டிப்ஸ் ஃபிலிம் நிறுவனம் தயாரித்துள்ள மெரி கிறிஸ்துமஸ் படம் டிசம்பர் 15, 2023 ரிலீஸ் ஆகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு டிசம்பர் 8ஆம் தேதியே வெளியாகும் என படக் குழு அறிவித்தது.
இந்நிலையில் தற்போது மீண்டும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. ஜனவரி 12 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மெரி கிறிஸ்துமஸ் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The wait is almost over! #MerryChristmas is making your winter merrier on January 12, 2024.#SriramRaghavan #MatchboxPictures @RameshTaurani #SanjayRoutray #JayaTaurani #KewalGarg @VijaySethuOffl #KatrinaKaif @realradikaa #KavinBabu #Shanmugaraja #AshwiniKalsekar pic.twitter.com/ZrcN91PQO5
— Tips Films (@TipsFilmsInd) November 16, 2023
Ae Dil hai mushkil, Brahmastra போன்ற படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் ப்ரீத்தம், மெரி கிறிஸ்துமஸ் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே பொங்கலுக்கு ரஜினியின் லால் சலாம், சிவகார்த்திகேயனின் அயலான், சுந்தர்.C -இன் அரண்மனை 4 ஆகிய படங்கள் வெளிவர உள்ள நிலையில் தற்போது மெரி கிறிஸ்துமஸ் படம் மூலமாக விஜய் சேதுபதியும் பொங்கல் ரேஸில் இணைந்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்..
– கார்த்திக் ராஜா