விஜய் சேதுபதி – கத்ரீனா பட ரீலீஸ் தேதி மாற்றம்..!

Published On:

| By Selvam

Vijay Sethupathi Merry Christmas

அந்தாதூன் பட இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை கத்ரீனா கைஃப் இணைந்து நடித்துள்ள படம் மெரி கிறிஸ்துமஸ்.

இந்த படம் ஹிந்தி, தமிழ் இரு மொழிகளிலும் Bilingual படமாக உருவாகியுள்ளது. ராதிகா சரத்குமார், சஞ்சய் கபூர், டினு ஆனந்த் உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

ரஜினிகாந்தின் கபாலி படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை ராதிகா ஆப்தே இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.

டிப்ஸ் ஃபிலிம் நிறுவனம் தயாரித்துள்ள மெரி கிறிஸ்துமஸ் படம், 2021 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டு கோவிட் காரணமாக படபிடிப்பு தள்ளிப்போனது.

அதன் பிறகு ஜனவரி 2023 ஆம் ஆண்டு இந்தப் படத்திற்கான படப்பிடிப்புகள் முடிக்கப்பட்டது.

ஏ தில் ஹாய் முஸ்கில், பிரம்மாஸ்திரா போன்ற படங்களுக்கு இசையமைத்து அந்தப் படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்த இசையமைப்பாளர் ப்ரீத்தம் தான் மெரி கிறிஸ்துமஸ் படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

இந்த படத்தை முதலில் டிசம்பர் 23, 2022 ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர். ஆனால் சில காரணங்களால் அந்த ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

அதன் பிறகு டிசம்பர் 15ஆம் தேதி 2023 இந்த படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அது நல்ல விஷயம்தான்.

டிசம்பர் 15ஆம் தேதி வெளியாக வேண்டிய மெரி கிறிஸ்துமஸ் தற்போது டிசம்பர் 8ஆம் தேதியே வெளியாகும் என படக் குழு அறிவித்து உள்ளது.

விஜய் சேதுபதி ஹிந்தியில் கத்ரீனா கைஃப் உடன் இணைந்து நடிக்கிறார் என்ற தகவல்களை பல மாதங்களுக்கு முன்பே ரசிகர்களும் பத்திரிகையாளர்களும் கூறிக்கொண்டு இருந்தனர்.

ஆனால், விக்னேஷ் சிவனின் “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தின் இறுதி காட்சியில் கத்ரீனா கைஃப் உடன் போனில் பேசுவது போல் விஜய் சேதுபதி நடித்து அந்த தகவலை உறுதிப்படுத்தியிருப்பார்.

தற்போது ஒரு வழியாக விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடித்துள்ள மெரி கிறிஸ்துமஸ் படத்தை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

– கார்த்திக் ராஜா

சாதிவாரி கணக்கெடுப்பு – அரசுக்கு உத்தரவிட முடியாது : உயர் நீதிமன்றம்!

மன்னிப்பு கேட்பதற்காகவே ஒரு பொதுக்கூட்டம்: அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சாதிவாரிக் கணக்கெடுப்பு: அநீதியைக் களையும் வாய்ப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel