இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ஹிட் அடித்த படம் விடுதலை. தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் வெற்றிமாறன். இந்த இரண்டாம் பாகத்தில் மஞ்சு வாரியர் நடிக்கிறார் என்ற செய்தியும் வெளியானது.
இந்நிலையில் மீண்டும் வெற்றிமாறன் – விஜய் சேதுபதி கூட்டணியில் ஒரு புதிய படம் உருவாக உள்ளதாகவும், ஆனால் அந்தப் படத்தை வெற்றிமாறன் இயக்கப் போவதில்லை என்றும் ஒரு தகவல் சினிமா வட்டாரத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது.
வெற்றிமாறன் கதை, திரைக்கதை எழுத வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம் தான் அந்த படத்தை இயக்கப் போகிறார் என்றும் கூறப்படுகிறது.
>ஏற்கனவே இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான “DSP” திரைப்படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்ததால் இந்த தகவலை கேட்டவுடன் விஜய் சேதுபதி ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டனர்.
ஆனால் மீண்டும் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக்கொண்டதற்கு வெற்றிமாறன் மீது உள்ள நம்பிக்கையும் மரியாதையும் தான் காரணம் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் அதிகாரப்பூர்வமாக இன்னும் எந்த தகவல்களும் வெளியாகவில்லை.
பொன்ராம் இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” படத்திற்கு “ஒரு கல் ஒரு கண்ணாடி” படத்தின் இயக்குனர் எம்.ராஜேஷ் வசனம் எழுதினார். அதேபோல் வெற்றிமாறன் கதை எழுதிருக்கும் பொன்ராமின் இந்த புதிய படமும் வெற்றி பெறும் என்று நம்புவோம்.
விஜய் சேதுபதி – பொன்ராம் கூட்டணிக்கு இன்னும் ஒரு சான்ஸ் கொடுத்து பார்க்கலாம்.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: காணொலிக் கூட்டம்… ஸ்டாலினிடம் சிக்கிய ஏழு மாசெக்கள்
சென்னையில் பேருந்து சேவை பாதிப்பு : ஓட்டுநர் பணியிடங்கள் நிரப்பப்படுமா?