கமல்ஹாசன் விஜய் சேதுபதியை புகழ்ந்து பேசும் வார்த்தையை தான் பலரும் சமூகவலைதளங்களில் இது விஜய் சேதுபதிக்கு கிடைத்த மாபெரும் வெகுமதி என்று பாராட்டி வருகின்றனர்.
விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளிவந்த மாமனிதன் திரைப்படம் விமர்சன ரீதியாக உலகளவில் நல்ல வரவேற்பைப் பெற்றாலும்; வசூல் ரீதியாக பெரும் தோல்வியை சந்தித்தது.
அதன் பின்னர் விஜய் சேதுபதியின் அடுத்த படம் என்ன என்பதை தேடி திரிந்த மக்களுக்கு கிடைத்த பதில் தான் பொன்ராம் இயக்கத்தில் தயாராகி உள்ள ’டிஎஸ்பி’ படம்.
மீண்டும் போலீஸ் வேடத்தில் சேதுபதி!
சேதுபதி படத்துக்கு பிறகு மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் விஜய் சேதுபதி. அந்த படத்தை விட டிஎஸ்பி படத்தில் மாஸ் காட்சிகள் பயங்கரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொன்ராம் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்துள்ளார். மேலும் பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்மந்தன், தீபா, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்க, வெங்கடேஷ், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். தினேஷ் சுப்பராயன் சண்டைப்பயிற்சி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
கலை இயக்குனராக குமார் பணியாற்ற, யுகபாரதி இந்த படத்தின் பாடல்களை எழுதியுள்ளார்.
தென்பகுதியை ஒட்டிய கதையம்சம் என்பதால் இயக்குநர் திண்டுக்கல் மாவட்டத்தில் படபிடிப்பைத் துவங்கினார். தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில் இந்த படமானது வரும் டிசம்பர் 2 ஆம் தேதி அன்று வெளியாக இருக்கிறது.
விஜய்சேதுபதிக்காக வந்த கமல்
இந்த நிலையில் தான் விஜய் சேதுபதி நடிக்கும் 46 வது படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவானது நேற்று (நவம்பர் 25) கமல்ஹாசன் முன்னிலையில் மிக விமரிசையாக நடைபெற்றது.
இருமல் மற்றும் காய்ச்சல் காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கமல்ஹாசன் நேற்று காலை தான் டிஸ்சார்ஜ் ஆனார்.
எனினும் வீட்டில் ஓய்வெடுக்காமல் அன்று மாலையில் நடைபெற்ற டிஎஸ்பி படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதிக்காக கலந்து கொண்டது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
விஜய்சேதுபதி முத்தம்
இவ்விழாவில் பேசிய கமல்ஹாசன், “என்னைப் போலவே விஜய்சேதுபதி சினிமா நேசர்… காரணம் நான் மார்லன் பிராண்டோ முன்பு மண்டியிட்டு அவரது கையில் முத்தமிடுவேன்.
விஜய் சேதுபதி எனக்கு முத்தமிட்டிருக்கிறார். நாளை யாரோ ஒரு கலைஞன் விஜய் சேதுபதிக்கு முத்தமிடுவார்” எனப் பேசி விஜய் சேதுபதிக்கு தன் வார்த்தையால் மகுடம் சூட்டியிருக்கிறார் கமல்ஹாசன்.
படம் வெளியாகும் முன்பே மிகப்பெரிய பேசுபொருளாகி இருக்கும் டிஎஸ்பி வசூல் சாதனை படைக்குமா? எப்போதும் மாஸ் காட்டும் விஜய் சேதுபதி இந்த படத்தில் வாஸ்காடகோமாவாக முத்திரைப் பதிப்பாரா? என்பதை எல்லாம் டிசம்பர் 2 ஆம் தேதி ரிலீஸ் அன்று பார்த்து விடலாம்.
பவித்ரா பாலசுப்பிரமணியம்
இந்தி திணிப்பு: தீக்குளித்து முதியவர் உயிரிழப்பு!
மும்பை தாக்குதல்: உயிர் பிழைத்தவர் உருக்கம்!