விஷ்ணு விஷாலுடன் இணையும் விஜய் சேதுபதி பட இயக்குனர்!

Published On:

| By christopher

ரௌத்திரம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜூங்கா போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் கோகுல். தற்போது இவரது இயக்கத்தில் RJ பாலாஜி நடிப்பில் வரும் ஜனவரி 25 ஆம் தேதி வெளியாக உள்ள படம் சிங்கப்பூர் சலூன்.

இந்நிலையில் தற்போது இயக்குனர் கோகுல் அவர்களின் அடுத்த படம் குறித்த அப்டேட் இன்று (ஜனவரி 8) வெளியாகி உள்ளது.

கோகுல் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் அவரது ‘விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் இப்படத்தை தயாரிக்க தயாரிக்க உள்ளது.

கோகுல் – விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவாக உள்ள இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட மாஸ் ஆக்சன் திரில்லர் திரைப்படமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விஷ்ணு விஷால் மற்றும் கோகுல் ஆகிய இருவரும் சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தற்போது விஷ்ணு விஷால் நடிப்பில் லால் சலாம் படம் திரைக்கு வர இருக்கிறது. அதனை தொடர்ந்து மோகன்தாஸ், ஆரியன் ஆகிய படங்களும் தயாராகி கொண்டிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கார்த்திக் ராஜா

முதலீட்டாளர் மாநாட்டைத் தொடர்ந்து வெளிநாடுகளுக்கு ஸ்டாலின் பயணம்!

அதிமுக தொழிற்சங்க நடவடிக்கைகளை முறியடிக்க வேண்டும் : தொ.மு.ச.

ராஷ்மிகாவை கரம்பிடிக்கும் விஜய் தேவரகொண்டா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share