ஆணையிடுங்கள்… உங்கள் தளபதி செய்து முடிக்கிறேன்: விஜய் பேச்சு!

சினிமா

லியோ படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

லியோ படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் ரத்ன குமார், நடிகர்கள் அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன், திரிஷா, மன்சூர் அலிகான், தயாரிப்பாளர் லலித் குமார் உட்பட படக்குழு அனைவரும் கலந்து கொண்டனர்.

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்தானதால் விஜய்யின் குட்டி ஸ்டோரியை கேட்காமல் கவலையில் இருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் வெற்றி விழா மேடையில் நடிகர் விஜய் செம சூப்பரான ஒரு குட்டி ஸ்டோரியை ரசிகர்களுக்கு கூறினார்.

லியோ படத்தின் ரிலீசுக்கு முன்பே “நான் ரெடி தான்” என்ற பாடல் வரிகளுக்கு பல தரப்பினர் தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர். இதற்கு பதில் அளிக்கும் வகையில், “விரல் இடுக்குல தீ பந்தம் என்றால் ஏன் நீங்கள் அதை பேனாவாக நினைக்க கூடாது? இது போன்று ஒரு மழுப்பலான காரணம் கூறி என்னால் கடந்து செல்ல முடியும். ஆனால் நான் அதை செய்ய விரும்பவில்லை. சினிமாவை சினிமாவாக பாருங்கள். உலகம் முழுவதும் சினிமாவை அப்படித்தான் பார்க்கிறார்கள்” என்று நடிகர் விஜய் வெற்றி விழா மேடையில் கூறினார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற கேள்வி தினமும் சமூக வலைதளங்களில் கேட்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதேபோல் சமூக வலைதளங்களில் விஜய் தான் தற்போது சூப்பர் ஸ்டார் என்றும், நடிகர் விஜய்க்கும் நடிகர் ரஜினிக்கும் இடையே கோல்ட் வார் நடந்து கொண்டிருக்கிறது என்றும் பல தகவல்கள் பரவி வருகிறது. இதற்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் லியோ படத்தின் வெற்றி விழா மேடையில்,
“புரட்சித் தலைவர்னா ஒருத்தர் தான். நடிகர் திலகம்னா ஒருத்தர் தான். புரட்சி கலைஞர்னா ஒருத்தர் தான். அதே மாதிரி உலக நாயகன்னா  ஒருத்தர் தான். சூப்பர் ஸ்டார்னா ஒருத்தர் தான். தலனா ஒருத்தர் தான். மக்களாகிய நீங்கள் தான் மன்னர். நான் உங்களுக்கு உதவியாக இருக்கும் தளபதி. நீங்கள் ஆணையிடுங்கள் நான் செய்து முடிக்கிறேன்” என்று நடிகர் விஜய் பேசியுள்ளார்.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

லியோ வெற்றி விழா: விஜய்யின் குட்டி ஸ்டோரி இதோ!

அமைச்சர் ஐ.பெரியசாமி வழக்கு: ஆவணங்கள் ஒப்படைப்பு!

+1
3
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *