நடிகர் விஜய் இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக இன்று (ஏப்ரல் 2 ) இணைந்துள்ளார். அவர் இணைந்த சில மணி நேரங்களில் 1.4 மில்லியன் ஃபாலோயெர்ஸ்களை பெற்றுள்ளார். இது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
ட்விட்டரில் கடந்த 2013ம் ஆண்டு இணைந்த நடிகர் விஜய் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கி உள்ள நடிகர் விஜய்யை அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் அதிகம் பின் தொடர்ந்து வருகின்றனர்.
விஜய் தனது பட ப்ரோமோஷன்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பல ஆண்டுகளாக செய்து வருகிறார். அதிகளவில் ட்வீட்களை போடாமல் இருந்தாலும், புதிய படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் ட்ரெய்லர்களை வெளியிட்டே ட்விட்டரில் அதிக ஃபாலோயர்களை பெற்றுள்ளார்.
2013ம் ஆண்டு நடிகர் விஜய் ட்விட்டரில் இணைந்த நிலையில், அவருக்கு இதுவரை 4.4 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோயர்களாக உள்ளனர்.
இந்நிலையில், ட்விட்டரை தொடர்ந்து நடிகர் விஜய் இன்ஸ்டாகிராமிலும் அதிகாரப்பூர்வமாக தனது கணக்கை துவங்கி உள்ளார். விஜய் இன்ஸ்டாகிராமில் கணக்கை தொடங்கிய சில மணி நேரத்தில் 1. 4 மில்லியன் ஃபாலோயர்கள் குவிந்துள்ளனர்.
காஷ்மீரில் லியோ படப்பிடிப்பில் இருந்த போது அங்கே பனி மலை பேக்கிரவுண்டில் நடிகர் விஜய் எடுத்துக் கொண்ட போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் முதல் போஸ்ட்டாகவும் தனது ப்ரோபைல் போட்டோவாகவும் வைத்துள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
லோகேஷ் கனகராஜ் கொடுத்த லியோ அப்டேட்!
’விடுதலை’கதைத் திருட்டு: எழுத்தாளர் குற்றச்சாட்டு!