தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய். அவ்வப்போது அந்த படம் குறித்த அப்டேட்களையும் படக்குழுவினர் சமூக வலைதளபக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் , விக்ரம், சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உட்பட பல நடிகர்கள் சமூக வலைதளப்பக்கங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் பக்கத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இதன் மூலம் தங்களது படங்களின் அப்டேட் குறித்த தகவல்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வருகின்றனர்.
அதேநேரம், நடிகர் விஜய் கடந்த 2013 ஆம் ஆண்டு ட்விட்டர் பக்கத்தில் இணைந்தார். இந்நிலையில், அவர் எப்போது இன்ஸ்டாகிராமில் இணைவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வந்தது.
இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 2) அதிகாரப்பூர்வமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்தார் நடிகர் விஜய் . அவர் இணைந்த 99 நிமிடத்தில் 1 மில்லியன் ஃபாலோயெர்ஸ்களை பெற்றார்.
அதிவேகமாக 1 மில்லியன் ஃபாலோயெர்ஸ்களை பெற்றவர்கள் பட்டியலில் தற்போது விஜய் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். முதல் இடத்தில் பிடிஎஸ் இசைக்குழுவைச் சேர்ந்த வி மற்றும் 2 வது இடத்தில் நடிகை ஏஞ்சலினா ஜோலி ஆகியோர் இருக்கின்றனர்.
இந்நிலையில், நடிகர் விஜய்யை வரவேற்று நடிகை சமந்தா இன்று (ஏப்ரல் 3) தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்றை பகிர்ந்துள்ளார். தற்போது அந்த பதிவை விஜய் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ராகுல் மேல்முறையீடு : ஜாமீன் நீட்டிப்பு!
ஏரோப்ளேன் மோடு: கலாஷேத்ரா ஹரிபத்மனை போலீஸ் தூக்கியது எப்படி?