”ரஞ்சிதமே கொஞ்சணுமே” வெளியான விஜய் பட முதல் பாடல் புரோமோ!

சினிமா

பீஸ்ட் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடித்து வரும் படம் வாரிசு. பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் இந்த படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு, குஷ்பு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் இந்த படத்தை தில் ராஜூ தயாரித்து வருகிறார்.

இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளர் தமன் முதல் முறையாக விஜய் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

விஜய் சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு குடும்ப பின்னணி கொண்ட படத்தில் நடித்துள்ளதால் வாரிசு படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே வாரிசு படம் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று (நவம்பர் 3 ) மாலை வெளியாகும் என்று படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் , ஃபர்ஸ்ட் சிங்கிள் தற்போது வெளியாகி உள்ளது.

அதன்படி இப்படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது. மேலும், அந்த வீடியோவில் இந்த பாடல் வருகிற நவம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜயே இந்த பாடலை பாடியுள்ளதால் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

சென்னையில் மழை: வெதர்மேன் கொடுத்த அப்டேட்!

டெலிகிராமுக்கு போட்டி: வாட்ஸ்அப் செய்த புதிய மாற்றம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *