கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூர் அலுவலகத்தில் மூன்று மாவட்ட நிர்வாகிகளை நடிகர் விஜய் இன்று (டிசம்பர் 13) சந்திக்கிறார்.
நடிகர் விஜய், ‘விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் ரசிகர் மன்றத்தை நடத்தி வருகிறார். கடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கணிசமான இடங்களில் வெற்றி பெற்று இருந்தனர்.
இந்நிலையில், விஜய் அரசியலுக்கு வருவாரா இல்லையா என்ற கேள்வி இருந்து வரும் நிலையில் கடந்த நவம்பர் 20ஆம் தேதி, சேலம், நாமக்கல், புதுக்கோட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட விஜய் மக்கள் நிர்வாகிகளுடன் பனையூரில் சந்திப்பு நடத்தினார்.
அதோடு இனி வரும் நாட்களில் மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை நடத்துவார் என்று அப்போது விஜய் மக்கள் இயக்கத்தினர் கூறினர்.
இந்த நிலையில் இன்று மேலும் மூன்று மாவட்ட நிர்வாகிகளைச் சந்திக்க விஜய் அழைத்துள்ளார்.
அரியலூர், பெரம்பலூர், உள்ளிட்ட மூன்று மாவட்ட நிர்வாகிகளை இன்று காலை பனையூரில் உள்ள அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்ததாக விஜய் மக்கள் இயக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய் தொடர்ந்து ரசிகர்களைச் சந்தித்து வருவது திரைத்துறை மட்டுமின்றி அரசியல் ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளது.
விஜய் நடிப்பில் வாரிசு, அஜித் நடிப்பில் துணிவு ஆகிய படங்கள் பொங்கலுக்கு ரிலீசாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
காட்டாற்று வெள்ளம்: இழுத்து செல்லப்பட்ட பெண்கள்!
காசி தமிழ் சங்கத்தில் மாமனிதன்: தேர்வானது எப்படி?