நடிகர் விஜய் சேதுபதியின் மகாராஜா படக்குழுவினரை நடிகர் விஜய் இன்று (ஜூலை 18) சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
பேஷன் ஸ்டுடியோஸ், ‘தி ரூட்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்த திரைப்படம் ‘மகாராஜா’. நடிகர் விஜய் சேதுபதியின் 50ஆவது படம். கடந்த ஜூன் 14 வெளியான இப்படம் வசூலை குவித்தது.
குரங்கு பொம்மை படத்தை கொடுத்திருந்த நித்திலன் சாமிநாதன் மகாராஜா படத்தை எழுதி இயக்கியிருந்தார். சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் பற்றி இப்படம் பேசியது.
கடந்த ஜூலை 12ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியிலும் வெளியாகி வரவேற்பை பெற்றது. நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் மகாராஜா படம் தொடர்ந்து இந்தியளவில் டாப் 10 படங்களில் முதலிடத்தில் உள்ளது.
இந்த நிலையில் மகாராஜா படக்குழுவினரை விஜய் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நித்திலன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த சிறப்பான சந்திப்புக்கு நன்றி அண்ணா. உங்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.
மகாராஜா படத்தை பற்றி நீங்கள் சொன்ன விவரங்கள் என்னைப் பெருமைப்படுத்துகின்றன. படம் பற்றி நீங்கள் பேசியது எனக்கு கிடைத்த பெரிய பாராட்டு. உங்கள் அன்பு, ஆதரவு மற்றும் ஊக்கத்திற்கு நன்றி. லவ் யூ” என்று குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. முக்கியமான 2 வீரர்கள் இல்லையே..!
ED வழக்கில் இருந்து விடுவிக்க மறுப்பு : செந்தில் பாலாஜியை ஆஜர்ப்படுத்த உத்தரவு!