லியோ வெற்றி விழா: விஜய்யின் குட்டி ஸ்டோரி இதோ!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் இன்று (நவம்பர் 1) சென்னை உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த வெற்றி விழா நிகழ்ச்சியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் ரத்ன குமார், நடிகர்கள் அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன், திரிஷா, மன்சூர் அலிகான், தயாரிப்பாளர் லலித் குமார் ஆகியோர் விழா மேடையில் லியோ படம் குறித்தும் நடிகர் விஜய் குறித்தும் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.

இவர்களைத் தொடர்ந்து லியோ படத்தின் வெற்றி விழா மேடையில் நடிகர் விஜய் பேசினார். லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மிஸ் ஆன குட்டி ஸ்டோரியை தற்போது லியோ படத்தின் வெற்றி விழா மேடையில் ரசிகர்களுக்கு சொல்லி இருக்கிறார் விஜய்.

நடிகர் விஜய் கூறியதாவது, “ஒரு காட்டுல யானை, புலி, மான், காக்கா, கழுகுன்னு நிறைய மிருகங்கள் இருந்துச்சு. காட்டுக்கு இரண்டு பேர் வேட்டைக்கு போனாங்க. ஒருத்தர் வில் அம்போட போய் முயல பிடிச்சுட்டு வந்தார். இன்னொருத்தர் ஈட்டியோடு போய் யானைக்கு குறி வைச்சு ஒன்னும் இல்லாம வந்தாரு. இதுல யார் வெற்றியாளர்? நிச்சயமா யானைக்கு குறி வைச்சவர் தான் வெற்றியாளர். எப்பவும் பெரிய விஷயங்களுக்கே கனவு காணுங்க” என செம மாஸ் ஆன ஒரு குட்டி ஸ்டோரியை தனது ரசிகர்களுக்கு கூறியுள்ளார்.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

நான் நேரில் பார்த்த லெஜண்ட் விஜய்: மிஷ்கின்

அமைச்சர் ஐ.பெரியசாமி வழக்கு: ஆவணங்கள் ஒப்படைப்பு!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts