விஜய் சொல்லப்போகும் குட்டி ஸ்டோரி: படக்குழு  அப்டேட்!

Published On:

| By Kavi

Vijay Kutty Story in Leo Success Meet

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர் வெற்றிகளை குவித்த லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில்,  விஜய், திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கவுதம் வாசுதேவ் மேனன், மடோனா செபாஸ்டின், பிரியா ஆனந்த், மத்தியூ தாமஸ், மன்சூர் அலி கான், மிஸ்கின் என திரையுலகின் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் தயாரான திரைப்படம் ‘லியோ‘.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு, அனிருத் இசையமைத்திருந்தார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருந்தார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருந்தார்.

கடந்த அக்டோபர் 19 அன்று வெளியான இந்த திரைப்படம், விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.

ஆனால், உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி தீர்க்க, வணிக ரீதியாக தொடர்ந்து சாதனைகளை அடுக்கி வருகிறது.

வெளியான முதல் நாளிலேயே ரூ.148.5 கோடி வசூல் செய்திருந்த இப்படம், 12 நாட்களில் ரூ.540 கோடி வசூலை கடந்துள்ளது.

விஜய் படங்கள் என்றாலே, ஆடியோ லான்ச், அதில் அவர் சொல்லும் குட்டி ஸ்டோரி மற்றும் அவர் பேசும் அரசியல் வசனங்கள் மிகுந்த கவனம் பெறும்.

ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால், ‘லியோ‘ படத்திற்காக இசை வெளியீட்டு விழாவை படக்குழுவால் நடத்த முடியாமல் போனது.

அதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பும் கோரியிருந்த படக்குழு, தற்போது அதனை ஈடு செய்யும் வகையில், சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில், நவம்பர் 1 அன்று ஒரு மாபெரும் ‘வெற்றி விழா’ ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வழக்கமாக இசை வெளியீட்டு விழாவில் சொல்லும் குட்டி ஸ்டோரியை, தளபதி விஜய் இந்த வெற்றி விழாவில் சொல்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இந்நிலையில், “இந்த விழாவில் தளபதி விஜய் குட்டி ஸ்டோரி சொல்லப்போகிறார். அதற்கு தயாராகுங்கள்”, என செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தனது X தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதற்காக, ஒரு ப்ரோமோ ஒன்றையும் தயாரித்து வெளியிட்டுள்ள செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ், “தளபதியோட குட்டி ஸ்டோரி இல்லாம எப்படி நண்பா”, என தனது பதிவில்  குறிப்பிட்டுள்ளது.

வெற்றி விழா குறித்த அறிவிப்பே, விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ள நிலையில், இந்த குட்டி ஸ்டோரி குறித்த அறிவிப்பு அவர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

முரளி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கூட்டணி ஆட்சியிலிருந்து கூட்டாட்சிக்கு: முதலமைச்சரின் ‘போட்காஸ்ட்’ உரை குறித்து சில குறிப்புகள்!

வீடியோ விடுவாரா ஸ்டாலின்? கண்டன குரல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel