ஜவான் திரைப்படம் உருவாகுவதற்கு காரணம் நடிகர் விஜய் தான் என்று இயக்குநர் அட்லி கூறியுள்ளார்.
ஜவான் படத்தின் முன் வெளியீட்டு விழா இன்று (ஆகஸ்ட் 30) சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் ஷாருக்கன், விஜய் சேதுபதி, அட்லி, யோகி பாபு , ப்ரியாமணிஉள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் விழாவில் இயக்குநர் அட்லீ பேசுகையில், “கடைசியா உங்க எல்லாரையும் பிகில் இசை வெளியீட்டு விழாவுல இதே இடத்துல பார்த்தேன்.
இந்தப் படம் நடக்க முக்கிய காரணம் என்னோட அண்ணன், என்னோட தளபதி, விஜய் சார்தான்.’ என்ன பண்ணுவன்னு தெரியாது இந்த படம் நீ பண்ணனும் ‘னு விஜய் அண்ணா சொன்னாரு. நான் ஷூட்டிங் போகும் போது ஷாருக்கான் ‘உன்ன பார்க்கணும்’னு சொன்னாருன்னு சொன்னாங்க. எந்திரன் படத்தோட ஷூட்டிங்ல ஷாருக்கான் சார் வீட்டு கதவு கிட்ட போட்டோ எடுத்தேன்.
மீண்டும் எனக்காக அதே கதவு திறந்துச்சு. ‘வெல்கம் அட்லி சார்’ னு என்னைய ஷாருக் வெல்கம் பண்ணினாரு. நான் 6 மாசத்துல படம் பண்ணி, 7வது மாசம் ரிலீஸ் பண்ணிடுவேன். இது எல்லாமே தளபதியாலதான். இந்த படம் நடக்கும் போது கோவிட் வந்துருச்சு. நம்ம தளபதியோட பேன், சொன்ன சொல்ல காப்பாத்தணும்”என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “விஜய் சேதுபதி பண்ணின மாதிரி வேற யாரும் பண்ண மாட்டாங்க. அவங்களுக்கு அந்த தைரியமில்ல. ஷாருக் சாருக்காக ‘ சிங்கமே’ன்னு ஒரு பாட்டு பண்ணி கொடுத்தாரு. இந்தில அந்த பாட்டோட பேரு தெரில. எனக்கு இந்தி தெரியாது.
இந்த படத்துல 13 பாட்டு இருக்கு. யோகி பாபுவ எல்லாரும் டேட் தரமாற்றாங்கன்னு சொல்றாங்க. அவரு பல உதவி இயக்குநரோட நலனுக்காக பல விஷயங்கள் பண்றாரு” என்று பேசினார். முன்னதாக, ஜவான் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி பல்வேறு மொழிகளில் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
நாளை நள்ளிரவு முதல் உயரும் சுங்கக்கட்டணம்!
லவ்குருவுக்கு வந்த சோதனை: அப்டேட் குமாரு