பொங்கலுக்கு வெளியாகும் வாரிசு திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
இதனை முன்னிட்டு முன்னதாகவே, தயாரிப்பாளர் தில் ராஜூ, இயக்குநர் வம்சி, கதாநாயகி ராஷ்மிகா மந்தனா, இசையமைப்பாளர் தமன், நடிகர்கள், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், ஷாம், சரத்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் பங்கேற்று வாரிசு திரைப்படம் குறித்தும், நடிகர் விஜய் குறித்தும் பேசி வருகின்றனர்.
சரத்குமார் பேசுகையில், “இந்த மாதிரி ஒரு மேடை கிடைக்காது. சூர்யவம்சம் வெற்றிவிழாவில் சொன்னேன் நடிகர் விஜய் தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று. கலைஞர் கூட இத கேட்டு அப்போ ஆச்சரியப்பட்டார்.
ஆனால் அதுதான் இப்போ நடந்துட்டு இருக்கு. நல்ல மனிதர் அவர். வாரிசு கண்டிப்பாக ஹிட்டாகும்” என்று தெரிவித்தார்.
தயாரிப்பாளர் லலித்குமார் பேசுகையில், “கொரோனா காலத்தில் 25 சதவீத தியேட்டர்கள் மட்டுமே இயங்கியது. மாஸ்டர் படத்தை வெளியிட ஓடிடி தளங்களில் இருந்து பெரிய ஆஃபர்கள் வந்தன.
ஆனால் தளபதி விஜய் தியேட்டர் திரைப்படத்தை வெளியிடவே விரும்பினார். அவர் விரும்பியபடியே படம் தியேட்டரில் வெளியாகி வசூல் சாதனை படைத்தது.
அதேபோல் வாரிசும் தளபதி விஜய்யின் திரைப்பயணத்தில் இதுவரை காணாத மாபெரும் வெற்றி படமாக அமையும். அதற்கு நான் உறுதி அளிக்கிறேன்.” என்றார்.
’ஹாய் செல்லம்ஸ்’ என்று பேச்சைத் தொடங்கிய பிரகாஷ் ராஜ் பேசுகையில், “14 வருஷத்துக்கு பிறகு முதல் ஷாட் எடுக்குறோம்.
என்கிட்ட வந்து விஜய் சொன்னாரு, செல்லம் இந்த கண்ண இவ்ளோ பக்கத்துல பார்த்து எவ்ளோ நாளாச்சு என்று. அவரோட வளர்ச்சிய பார்க்க சர்ப்ரைஸா இருக்கு.” என்றார்.
இந்தபடத்தின் வில்லன் நான் தான் என்று சர்ப்ரைஸை போட்டுடைத்தார் பிரகாஷ் ராஜ். அவர் மேலும் பேசுகையில், “மானிட்டரை பார்க்கும் விஜய் நடிப்பில் காட்டும் மேஜிக்கை கண்டு வியந்தேன். நீங்கள் எல்லோரும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை பார்க்கும்போது உணர்வீர்கள்.
தளபதியோட நட்சத்திர அந்தஸ்துக்கு புது சவுண்ட் கொடுத்துருக்காரு தமன்.
வாரிசு பாசிட்டிவிட்டியை பகிரும். இந்த தலைமுறைக்கு மிக அவசியமான படம் இது. நான் உங்கள் ரசிகன் விஜய் என்று அவர் பேச்சை முடிக்க ரசிகர்களின் சத்தம் அரங்கை அதிர வைத்தது.
நடிகர் ஷாம் பேசுகையில், “ வாரிசு குடும்பத்தில் நான் தான் சின்ன பையன். தொழில்முறையில வானம் அளவுக்கு இருக்காரு நடிகர் விஜய் அண்ணா.
இவ்ளோ வருடத்தில் அவர் யாரையும் தப்பா பேசி நான் பார்த்ததில்லை. அதே மாதிரி நான் எத்தனையோ பான் இந்தியா நடிகர்களை பார்த்திருக்கிறேன். ஆனால் விஜய் சார் ஒரு நல்ல மனிதர்.
தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் கூறுகையில், “இது வரைக்கும் தெலுங்குல 125 படம் பண்ணிருக்கேன். விஜய் சாரை பார்த்து நிறைய கற்றுக்கொண்டேன்.
தளபதி விஜய் ரியல் லைப்லையும் ஒரு சூப்பர்ஸ்டார் தான். இவரை மாதிரி ஒரு ஹீரோவை நான் இதுவரை பார்த்ததில்லை.” என்று தெரிவித்தார்.
கிறிஸ்டோபர் ஜெமா
ஊடகம் உண்மையைக் காட்டுவதில்லை: ராகுல் வேதனை!
பிரபல இயக்குநர் குறித்து பேச நடிகைக்கு தடை!