நடிகர் விஜய்க்கு மீண்டும் அபராதம் விதிப்பு!

Published On:

| By christopher

சாலை போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் காரில் சென்ற நடிகர் விஜய்க்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக ஆதிக்கம் செலுத்தி வரும் நடிகர் விஜய், தற்போது அரசியல் களத்திலும் தனது பார்வையை செலுத்தி வருகிறார்.

அதன்படி கடந்தமாதம் தொகுதி வாரியாக 10,12ஆம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை சந்தித்து பரிசுகள் வழங்கினார். அப்போது அங்கு வந்திருந்த மாணவிகளே விஜயை அரசியலுக்கு வரும்படி கோரிக்கை வைத்தது பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் விழாவை சிறப்பாக நடத்திய அனைத்து மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை நேற்று (ஜூலை 11) சந்தித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

அதில் விஜய் தனது அரசியலில் களமிறங்குவதற்காக மாநிலம் முழுவதும் செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்ததாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே நேற்று, விஜய் நீலாங்கரையில் உள்ள அவருடைய வீட்டிலிருந்து பனையூர் அலுவலகத்திற்கு செல்லும்போது,  போக்குவரத்து சிக்னலில் நிற்காமல் சென்றதாக சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதன் தொடர்ச்சியாக போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் சென்ற நடிகர் விஜய்க்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விஜயின் காரில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்ததற்காக ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் அடுத்த 7 மாதத்திற்குள் போக்குவரத்து சிக்னலை மதிக்காத விஜய்க்கு தற்போது மீண்டும் 500 ருபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது அவர் மீதான விமர்சனத்தை அதிகரித்துள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க! 

மக்கள் நலனா? டாஸ்மாக் வருவாயா? 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel