நடிகர் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தின் கேரளா வெளியீட்டு உரிமையை ஃபிலிம் எக்ஸிபிட்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் கேரளா (FEUOK) மிகப்பெரிய தொகைக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலுக்கு பிறகு கடந்த 2021ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற “மாஸ்டர்” திரைப்படத்திற்குப் பிறகு, விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் இணைந்துள்ள 2வது படம் ’லியோ’.
இதில் விஜய்யுடன் கதாநாயகியாக த்ரிஷாவும், முக்கிய கதாப்பாத்திரத்தில் சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்துள்ளனர்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துவரும் லியோ திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் இந்தாண்டு அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகிறது.
பட வெளியீட்டுக்கு இன்னும் 5 மாதங்கள் உள்ள நிலையில், படத்தை வெளியிடுவது தொடர்பான பேச்சுவார்த்தையில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இறங்கியுள்ளது.

அதன்படி, கேரளாவின் பிரபல திரைப்பட வெளியீட்டு நிறுவனமான ’ஃபிலிம் எக்சிபிட்டர்ஸ் யுனைடெட் ஆர்கனைசேஷன் ஆஃப் கேரளா (FEUOK) விஜய்யின் லியோ படத்திற்கான திரையரங்கு உரிமையை ரூ.15 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் கொச்சியில் நேற்று இதுதொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய அளவில் வெறித்தனமான ரசிகர் கூட்டம் கேரளாவில் உள்ளது.
இதனால் கேரளா நடிகர்களை விட விஜய்யின் ஒவ்வொரு திரைப்படமும் பெரிய அளவில் ஓப்பனிங் பெறுவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் “லியோ”, இந்தாண்டில் ரசிகர்களால் அதிகம் எதிர்ப்பார்க்கப்படும் திரைப்படமாக உள்ளது.
ஏற்கெனவே சாட்டிலைட், டிஜிட்டல், இசை மற்றும் திரையரங்கு உரிமைகள் விற்பனையின் மூலம் ரிலீஸுக்கு முன்பே ரூ.400 கோடி வசூலை ஈட்டிய முதல் தமிழ்ப் படமாக லியோ உள்ளது.
இந்நிலையில் கேரளா வெளியீட்டு உரிமையை FEUOK பெற்றிருப்பதன் மூலம் விஜய்யின் லியோ திரைப்படம் அதிகபடியான திரையரங்குகளில் வெளியாகும் எனவும்,
முதல் நாள் வசூலில் கேரளா நடிகர்களின் சாதனையையே முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேரளா திரைப்பட முதல் நாள் வசூல் வரலாற்றில் 7.25 கோடி ரூபாய் பெற்று கே.ஜி.எப் 2 முதலிடத்தில் உள்ளது.
நடிகர் விஜய்யின் திரைப்படங்களில் அதிகபட்சமாக சர்க்கார் 6.05 கோடி ரூபாய் பெற்று 7வது இடத்தில் உள்ளதாக IMDB தெரிவித்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
45 நாள் கெடு: மோடி அரசை எச்சரித்த உலக மல்யுத்த கூட்டமைப்பு!
மாணவர்கள் பயணம்: போக்குவரத்துத்துறை அதிரடி உத்தரவு!