வாரிசுக்காக விஜய் ரசிகர்கள் செய்த விநோத செயல்!

சினிமா

வாரிசு திரைப்படம் வெற்றிபெற வேண்டி விஜய் ரசிகர்கள் தோப்புக்கரணம் போட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

நடிகர் விஜய் மற்றும் நடிகர் அஜித் ஆகியோரின் படங்கள் 8 ஆண்டுகளுக்கு பிறகு நேரடியாக வரும் பொங்கல் அன்று மோத உள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் இரண்டு பேருக்கும் சரிசமமாக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து இருதரப்பு ரசிகர்களும் பல்வேறு வேண்டுதல்கள் மற்றும் விளம்பரங்களை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் பொங்கலுக்கு வெளிவர உள்ள விஜய்யின் வாரிசு திரைப்படம் வெற்றி பெற வேண்டி விஜய் ரசிகர்கள் வித்தியாசமான பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலின் விநாயகர் சன்னதியில் வாரிசு படம் வெற்றி பெற வேண்டி 108 தோப்புக்கரணம் போட்டு விஜய் ரசிகர்கள் வினோத பிரார்த்தனை செய்தனர்.

சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபாடு செய்த விஜய் ரசிகர்கள் கோவில் வளாகத்தில் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கினர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

”நெஞ்சை பூ போல் கொய்தவளே” ஹாரிஸ் ஜெயராஜ் 10 தகவல்கள்!

புதுக்கோட்டை சம்பவம்: போராட்டத்தை அறிவித்த விசிக

+1
0
+1
2
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.