நடிகர் விஜய் நடித்த கோட் படம் இன்று (செப்டம்பர் 5) வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை நடிகர் விஜய் குடும்பத்துடன் சென்று பார்த்தது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்று சமீப காலங்களாக செய்திகள் வந்தன. இதை வலுப்படுத்தும் வகையில் பொதுஇடங்களில் மனைவியுடன் விஜய் வருவதில்லை. மேலும் தந்தை ஏ.எஸ்.சியுடனும் விஜய்க்கு இணக்கம் இல்லை என்று சமூக தளங்களில் பேசப்பட்டது.
ஆனால் இதை முறியடிக்கும் வகையில் கடந்த ஆகஸ்டு 22 ஆம் தேதி சென்னையில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழாவில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், தாயார் ஷோபா இருவரும் பங்கேற்று விஜய்க்கு ஆசி வழங்கினர். விஜய் இந்நிகழ்வில் பேசும்போது, ‘என்னோட அப்பா, அம்மா வந்திருப்பது கூடுதல் சந்தோஷம்’ என்று குறிப்பிட்டார்.
பெற்றோருடன் முரண்பாடு என்ற வதந்திக்கு முற்றுப் புள்ளி வைத்த விஜய், கோட் படத்தைப் பார்க்க மனைவி சங்கீதாவுடன் வந்து சமூகவலை தளங்களில் பேசப்பட்ட விஷயங்களை பொய்யாக்கியுள்ளார்.
சென்னை அடையாறில் விஜய் தனது மனைவி சங்கீதா, மகன், மகள், பெற்றோர்கள் மற்றும் படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு, சினேகா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட படகுழுவினருடன் நேற்று இரவு கோட் படத்தை பார்த்து ரசித்திருக்கிறார்.
கோட் படத்துக்கு பிறகு தளபதி 69 நடிகர் விஜய்யின் கடைசிப் படமாக அமைகிறது. அடுத்து, தொடர்ந்து தீவிர அரசியலில் நடிகர் விஜய் ஈடுபடப் போகிறார். இந்நிலையில் தனது குடும்பத்தைப் பற்றி பரவிய செய்திகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கோட் படத்தை குடும்பத்தோடு பார்த்துள்ளார் விஜய்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
செல்போன் புற்றுநோய் உண்டாக்குமா? உண்மை என்ன?
ஐ.பி.எல். பிராண்ட் வேல்யூ குறைந்தது… பின்னணியில் தோனி?