இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை எனக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கின்றனர் என, நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.
கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்களில் இணைந்து நடித்த விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா மந்தனா இருவரும் வருகின்ற பிப்ரவரியில் நிச்சயதார்த்தம் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இருவர் வீட்டிலும் ஒப்புக்கொண்டதாகவும் காதலர் தினமான 14-ம் தேதி இருவருக்கும் நிச்சயதார்த்தம் என்று வெளியான தகவல்களுக்கு விஜய், ராஷ்மிகா இருவரும் விளக்கம் எதுவும் அளிக்கவில்லை.
இந்த நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டா இந்த நிச்சயதார்த்தம் தொடர்பான தகவல்களுக்கு தற்போது விளக்கம் அளித்து முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
இதுகுறித்து அவர், ”பிப்ரவரியில் எனக்கு திருமணமோ, நிச்சயதார்த்தமோ நடக்கவில்லை. ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் ஒருமுறை எனக்கு திருமணம் செய்து வைக்க பத்திரிகைகள் நினைக்கின்றன.
ஒவ்வொரு வருடமும் இந்த வதந்தியை நான் கேட்கிறேன். நான் திருமணம் செய்து கொள்வதற்காக அவர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர்,” என தெரிவித்துள்ளார்.
விஜய் தேவரகொண்டா தற்போது பேமிலி ஸ்டார் மற்றும் பெயரிடப்படாத தன்னுடைய 12-வது படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார்.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பணிப்பெண்ணை கொடுமைப்படுத்திய விவகாரத்தில் எனக்கு தொடர்பில்லை: கருணாநிதி எம்.எல்.ஏ
பிரதமர் வருகை: சென்னை, திருச்சி, ராமேஸ்வரத்தில் கடும் கட்டுப்பாடுகள்!