பிரபல தெலுங்கு இயக்குநர் பரசுராம் இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாக உள்ள படம் ஃபேமிலி ஸ்டார். ஏற்கனவே இருவரது கூட்டணியில் வெளியான கீதா கோவிந்தம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
இதனால் இரண்டாவது முறை இவர்களின் கூட்டணியில் உருவாகி உள்ள ஃபேமிலி ஸ்டார் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் சார்பில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு இந்த படத்தை தயாரிக்க, கோபி சுந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஃபேமிலி ஸ்டார் படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக மிருணாள் தாகூர் நடித்துள்ளார். கடைசியாக அவரது நடிப்பில் தெலுங்கில் வெளியான ஹாய் நான்னா படம் மெகா ஹிட் அடித்தது.
இதனால் தற்போது தெலுங்கு திரையுலகின் முக்கிய ஹீரோயினாக மிருணாள் தாகூர் வலம் வந்து கொண்டிருக்கிறார்.சமீபத்தில் ஃபேமிலி ஸ்டார் படத்தின் டீசர், பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது இந்த படத்தின் டிரைலரை படக் குழு வெளியிட்டுள்ளது.
இந்த படத்தின் டிரைலரில், லுங்கி கட்டிக் கொண்டு வெளிநாட்டில் உள்ள ஒரு கார்ப்பரேட் ஆபீஸுக்குள் விஜய் தேவரகொண்டா நுழையும் காட்சி ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
குடும்ப சென்டிமென்ட், யூத் ஃபுல்லான காதல் காட்சிகள், இரத்தம் தெறிக்கும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் என ஒரு பக்கா கமர்ஷியல் படமாக ஃபேமிலி ஸ்டார் உருவாகி இருக்கிறது.வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கீதா கோவிந்தம் படத்தின் வெற்றிக்கு பிறகு தான் விஜய் தேவரகொண்டாவிற்கு மிகப் பெரியளவில் ஃபேமிலி ஆடியன்ஸின் ஆதரவு கிடைத்தது. அதேபோல் மீண்டும் ஃபேமிலி ஸ்டார் படத்தின் மூலம் குடும்பங்கள் கொண்டாடும் நாயகனாக விஜய் தேவரகொண்டா வலம் வருவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
செந்தில் பாலாஜியின் புதிய மனு: அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!