சர்ச்சையில் லைகர் : அமலாக்கத்துறை முன்பு பிரபல நடிகர் ஆஜர்!

சினிமா

லைகர் திரைப்பட முதலீடு தொடர்பாக நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு சம்மன்அனுப்பப்பட்ட நிலையில், ஐதராபாத் அமலாக்க இயக்குனரகம் முன்பு அவர் இன்று (நவம்பர் 30) ஆஜரானார்.

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான லைகர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. இதனை பிரபல நடிகை சார்மி கவுர் தயாரிக்க, பூரி ஜெகநாத் இயக்கியிருந்தார்.

பான் இந்தியா படமாக சுமார் ரூ. 125 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக லைகர் எடுக்கப்பட்டது,எனினும் படுமோசமான விமர்சனங்களைப் பெற்ற நிலையில் இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில், சந்தேகத்திற்கு இடமான முறையில் லைகர் படத்திற்கு முதலீடு பெறப்பட்டதாக தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் பக்கா ஜூட்சன் குற்றஞ்சாட்டினார்.

லைகர் படம் தொடர்பாக அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை (ஃபெமா) நடிகர் விஜய் தேவரகொண்டா, இயக்குனர் பூரி ஜெகன்நாத், தயாரிப்பாளர் சார்மி கவுர் ஆகியோர் மீறியதாக பக்கா ஜூட்சன் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், பிரபல அரசியல்வாதிகள் கூட தங்கள் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்காக லைகர் படத்தில் முதலீடு செய்துள்ளனர் என்று கூறினார்.

ஜுட்சனின் இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மேற்கண்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை விசாரணை மேற்கொள்ள சம்மன் அனுப்பியது.

vijay devarakonda appears before ed in hyderabad

அதன்படி கடந்த 17 ம் தேதி இயக்குனர் பூரி ஜெகநாத் மற்றும் தயாரிப்பாளர் சார்மி கவுரிடம் கிட்டத்தட்ட 12 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அப்போது ஃபெமா விதிமுறைகளை மீறி லைகர் திரைப்பட தயாரிப்பில் வெளி நாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரிகள் விசாரித்தனர்.

அதனைத் தொடர்ந்து நவம்பர் 30 ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.

அதன்படி நடிகர் விஜய் தேவரகொண்டா ஐதராபாத்தில் உள்ள அமலாக்க இயக்குனரக அலுவலகம் முன் விசாரணைக்கு இன்று ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவரிடம் திரைப்படத்திற்கான முதலீடு, அவரது சம்பளம் மற்றும் அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் உள்ளிட்ட பிற நடிகர்களுக்கு செலுத்தப்பட்ட பணம் குறித்து விஜய் தேவரகொண்டாவிடம் கேள்வி எழுப்படும் என்று கூறப்படுகிறது.

இது தெலுங்கு திரையுலகம் மட்டுமின்றி அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

தேசிய விருதுகளை பெற்ற தமிழ்நாட்டு வீரர்கள்!

11 பேர் விடுதலை: பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் மனு!

ஆன்லைன் ரம்மி: ஆளுநரை சந்திக்கிறார் சட்டத்துறை அமைச்சர்

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *