நடிகர் விஜய் ஆண்டனி நடிக்க, படத்தொகுப்பாளர் லியோ ஜான் பால் இயக்குநராக களமிறங்கும் திரைப்படத்திற்கு ‘ககன மார்கன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை விஜய் ஆண்டனியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஜய் ஆண்டனி ஃபிலிம்ஸ் கார்பரேஷன்’ தயாரிக்கிறது.
‘ககன மார்கன்’ என்கிற பெயருக்கு சித்தர் மொழியில் ‘ஆகாயத்தில் பறப்பவன்’ என்று பொருளாம். டிடெக்டிவ் திரில்லராக உருவாகும் இந்தப் படத்தில் சமுத்திர கனி, ’மகாநதி’ சங்கர், பிரிதிகா, பிரிகிடா, வினோத் சாகர், அஜய் திஷன் , தீப்ஷிகா, அர்ச்சனா, கனிமொழி, ‘அந்தகாரம்’ நடராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் லியோ ஜான் பால் ‘பீட்சா’, ‘அட்டக்கத்தி’, ‘சூது கவ்வும்’, ‘முண்டாசுப்பட்டி’, ‘தெகிடி’ ,’இன்று நேற்று நாளை’ ஆகிய படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணிபுரிந்தவர்.
மேலும், ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ‘ திரைப்படத்திற்காக இவருக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் இந்த ‘ககன மார்கன்’ படத்திற்கு யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படத்திற்காக, தண்ணீருக்கு அடியில் எடுக்கப்படும் சில காட்சிகள் பிரேத்யேக தொழில்நுட்பங்களுடன் மும்பையில் படமாக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– ஷா
”அதிமுக பிரிந்துவிட்டதுனு இனி சொல்லாதீங்க” : எடப்பாடி ஆதங்கம்!
பிக் பாஸ் சீசன் 8 : ’என் இடுப்ப தொட்டா ஃபேன்ஸ் கோவிச்சிப்பாங்க!’ – தர்ஷா குப்தா