இசை வெளியீட்டு விழா மேடையில் ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பதற்கு டெமோ நடத்தி தருமாறு விஜய் ஆண்டனி கேட்க, கவுதம் மேனனும் உடனடியாக எதிர்வினையாற்றியது அங்கிருந்த பார்வையாளர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.
இசையமைப்பாளர், எடிட்டர், நடிகர், இயக்குநர் என பல் துறைகளில் பணியாற்றி வரும் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் ஹிட்லர். ‘படைவீரன்’, ‘வானம் கொட்டட்டும்’ படங்களை இயக்கிய தனா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இதில் ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சரண்ராஜ், இயக்குநர்கள் கௌதம் மேனன், தமிழ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஹிட்லர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (செப்டம்பர் 16) சென்னையில் நடைப்பெற்றது. விஜய் ஆண்டனி மேடையில் பேசுகையில், கவுதம் வாசுதேவ் மேனனிடம் தனக்கு ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க மேடையிலயே ஒரு டெமோ செய்து காட்டும்படி கேட்டுக் கொண்டார்.
கவுதம் வாசுதேவ் மேனனும் எந்த வித தயக்கமும் இன்றி அவரது படத்தின் பிரபல வசனமான விண்ணை தாண்டி வருவாயா மற்றும் வாரணம் ஆயிரம் படத்தின் வசனங்களை பேச சொன்னார்.
விஜய் ஆண்டனியும் அங்கு இருந்த நாயகிகளிடம் அந்த வசனத்தை பேசி ஒத்திகை பார்த்தார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்கள் இடையே சிரிப்பலையை ஏற்படுத்த, இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இராமானுஜம்
கெளதம் மேனன் டைரக்சனில் மேடையில் ரொமன்ஸ் செய்த விஜய் ஆண்டனி
சிறப்பு பூஜை நடத்தியும் பயனில்லை… 6 சார் பதிவாளர் அலுவலகங்களில் ரூ.11.93 லட்சம் சிக்கியது!