அப்பாவி விஜய் ஆண்டனி: “ரோமியோ” போஸ்டர் ரிலீஸ்!

சினிமா

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் 2, கொலை ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் ஆண்டனி நடிப்பில் ஹிட்லர் என்ற படம் வெளியாக இருக்கிறது. தற்போது விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள புதிய படம் “ரோமியோ”.

இப்படத்தின் இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் யூடியூபில் ‘காதல் டிஸ்டன்ஸிங்’ என்ற பிரபலமான வெப் சீரிஸை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிகர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடித்திருக்கிறார்.

நடிகர்கள் யோகி பாபு, VTV கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ரொமான்டிக் காதல் கதை களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது.

ரோமியோ போஸ்டரில், முதலிரவு அறைக்குள் விஜய் ஆண்டனி அப்பாவியாக கையில் பால் செம்போடு அமர்ந்திருக்க, மிருணாளினி ரவி மது பாட்டிலை கையில் வைத்திருப்பது போல போஸ்டர் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்தை, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. வரும் கோடை விடுமுறையை முன்னிட்டு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இந்த படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“ரஜினி சார் தைரியம் யாருக்கும் வராது”: விஷ்ணு விஷால்

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: தமிழகம் முழுவதும் இன்று தொடங்குகிறது!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

பியூட்டி டிப்ஸ்: சருமம் பளபளக்க… வீட்டிலேயே வெந்தய பேக்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0