மீண்டும் போலீஸாக விஜய் ஆண்டனி: ‘வள்ளி மயில்’ டீசர் ரிலீஸ்!

Published On:

| By Monisha

vijay antony in valli mayil teaser

பிச்சைக்காரன் 2, ரத்தம் என தொடர்ந்து நடிகர் விஜய் ஆண்டனி நடித்த படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்று எதிர்பார்த்த வெற்றியை அவருக்கு கொடுக்கவில்லை.

இந்த படங்களை தொடர்ந்து தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் `வள்ளி மயில்’ என்ற படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக பரியா அப்துல்லா நடித்துள்ளார். பாரதிராஜா, சத்யராஜ், சுனில், தம்பி ராமையா, ஜி.பி.முத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

டி. இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். நல்லு சாமி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தாய் சரவணன் இந்த படத்தை தயாரித்துள்ளார். 1980 காலகட்டத்தில்  நடக்கும் ஒரு ஆக்சன் திரில்லர் படமாக `வள்ளி மயில்’ தயாராகி உள்ளது.

இந்நிலையில் இன்று (நவம்பர் 28) வள்ளி மயில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. திமிரு பிடிச்சவன் படத்திற்கு பின் இரண்டாவது முறையாக நடிகர் விஜய் ஆண்டனி வள்ளி மயில் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– கார்த்திக் ராஜா

நானியின் பார்ட்டி வைப் சாங் ‘Odiyamma’ ரிலீஸ்!

ஞானவேலின் பின்னால் சிவகுமார், சூர்யா, கார்த்தி: கரு பழனியப்பன் சந்தேகம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share