நடிகர் விஜய் ஆண்டனி தான் 90% குணமடைந்து விட்டதாக சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி
சமீபத்தில் மலேசியாவில் லங்காவி தீவில் நடந்த பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விஜய் ஆண்டனி பலத்த காயமடைந்தார்.
உடனடியாக அவரை மீட்ட படக்குழுவினர் லங்காவி தீவிலிருந்து கோலாலம்பூருக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். பின்னர் அங்கிருந்து சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் விஜய் ஆண்டனி அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இதையடுத்து அவரை இரண்டு வாரம் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.
இந்நிலையில் அவர் இன்று (பிப்ரவரி 2 ) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் , ”அன்பு இதயங்களே… நான் 90% குணமடைந்து விட்டேன். உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன.என்னமோ தெரியவில்லை, நான் இப்போது முன்பை விட அதிக சந்தோஷத்தை உங்களால் உணருகிறேன்.
வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் பிச்சைக்காரன் 2 பட வேலைகளை இன்று முதல் தொடங்குகிறேன். அன்புக்கு நன்றி” எனக் குறிப்பிட்டு உள்ளார்.
இந்த பதிவால் விஜய் ஆண்டனி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். முன்னதாக விஜய் ஆண்டனி தன் உடல்நிலை குறித்து பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ’தம்ப்ஸ் அப்’ காண்பித்தபடி ட்வீட் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
விஞ்ஞான முறையில் ஆவின் பால் விலை உயர்வு?
ஈபிஎஸ் இடையீட்டு மனுவை எதிர்த்து ஓபிஎஸ் மனு!