இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள் தற்கொலை!

சினிமா

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா இன்று அதிகாலை (செப்டம்பர் 19) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நான், சைத்தான், பிச்சைக்காரன், கோடியில் ஒருவன்,  உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இவர் தனது மனைவி பாத்திமா மற்றும் இரண்டு மகள்கள் மீரா, லாரா ஆகியோருடன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டிடிகே சாலையில் வசித்து வருகிறார்.

16 வயதான இவரது மூத்த மகள் மீரா சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.

 

இந்த நிலையில் இன்று காலை மீராவின் அறை கதவு வெகுநேரமாக திறக்காததால் கதவை திறந்துகொண்டு உள்ளே சென்று பெற்றோர் பார்த்துள்ளனர்.

அப்போது அவரது மகள் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து  தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்வப இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மீராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே இன்று அதிகாலை 3 மணியளவில் மீரா தனது அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் என்றும், கடந்த சில நாட்களாகவே அவர் மனஅழுத்தத்தில் இருந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

சமூகவலைதளங்களில் பெரும்பாலௌம் ஊக்கமூட்டும் வகையில் பேசி வரும் நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை சினிமா வட்டாரங்கள் மட்டுமின்றி அவரது ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

தேயிலை: விவசாயத் துறைக்கு மாற்றப்படுமா? நிரந்தர தீர்வு எப்போது?

கிச்சன் கீர்த்தனா: சங்குப்பூ டீ

+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *