காமெடியில் இருந்து விலகி விட்டாரா சி.எஸ்.அமுதன்?

Published On:

| By christopher

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரத்தம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டு வெளியான‘தமிழ்ப் படம்’ மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சி.எஸ்.அமுதன்.

தமிழ் திரைப்படங்களை விமர்சனம் செய்யும் திரைக்கதை கொண்ட திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் அதுவரை வெளியானது இல்லை. முதல் முறையாக தமிழ் படம் மூலம் அதனை அரங்கேற்றி மாபெரும் வெற்றி படமாக்கினார் சி.எஸ்.அமுதன்.

தற்போது விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்திருக்கும் ரத்தம் படத்தை இயக்கியுள்ளார் சி.எஸ்.அமுதன். இந்தப் படத்தில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமிழ்ப் படத்துக்கு இசையமைத்த கண்ணன் நாராயணன் இந்தப் படத்துக்கும் இசையமைத்துள்ளார். இன்ஃபினிடி ஃபிலிம் வென்ச்சர்ஸ் சார்பில் கமல் போரா, லலிதா தனஞ்செயன், பிரதீப், பங்கஜ் போரா, விக்ரம் குமார் ஆகியோர் படத்தை தயாரித்துள்ளனர். படத்தின் ட்ரெய்லர் நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? 

தமிழ் படத்தில் இருந்த காமெடி, சட்டையர் பாணியில் இருந்து விலகி அமுதன்  சீரியஸான அரசியல் பேசியிருக்கும் படம் ரத்தம் என்பது ட்ரெய்லர் உணர்த்துகிறது.
 தலைப்புக்கு ஏற்றார்போல ட்ரெய்லர் ரத்தம், கொலையுடனே தொடங்குகிறது. தனது வழக்கமான சீரியஸ் முகபாவனையுடன் முழுக்க தாடியை வைத்துக்கொண்டும், தாடியில்லாமலும் இரண்டு விதமான தோற்றங்களில்  காட்சியளிக்கிறார் கதாநாயகன் விஜய் ஆண்டனி. சீரியஸாக செல்லும் காட்சிகளின் நடுவே வலைத்தள விமர்சகர்களின் வீடியோக்களை கிண்டலடிக்கும் வகையில் அணுகியிருக்கிறார் இயக்குநர்.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share