அஜித்குமார் நடிப்பில் தயாராகியுள்ள துணிவு படம் பொங்கல் வெளியீடு என தேதி குறிப்பிடப்படாமல் நேற்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
இதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ திரைப்படம் உலகம் முழுவதும் எதிர்வரும் 2023 பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழுவும், தமிழ்நாடு விநியோக உரிமையை பெற்றுள்ள செவன் ஸ்கீரீன் நிறுவனமும் அறிவித்துள்ளது.
இந்த படத்திற்கு ஆந்திராவில் தேவையான திரையரங்குகள் கிடைக்கும் எனவும், இந்தியிலும் வாரிசு படம் வெளியாகும் எனவும் அப்படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜ் தெரிவித்திருந்தார்.
வாரிசு திரைப்படத்தை இயக்குனர் வம்சி இயக்கி உள்ளார். படத்திற்கான வசனத்தை விவேக் எழுதி உள்ளார். தமன் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் பிவிபி சினிமா தயாரித்துள்ளது.
துணிவு படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் பெற்றுள்ளதால் அதிகமான திரையரங்குகளில் அப்படம் வெளியாகும்.
வாரிசு படத்திற்கு குறைவான திரையரங்குகளே கிடைக்கும் என கூறப்பட்டது.
அதனால் வாரிசு படத்தின் வெளியீட்டு தேதி மாறலாம் அல்லது ரெட் ஜெயண்ட் மூவீஸ் வசம் தியேட்டர் எடுக்கும் பொறுப்பை செவன் ஸ்கிரீன் ஒப்படைக்கும் என ஆருடங்கள் கூறப்பட்டு வந்தன.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள ஒன்பது விநியோக பகுதி உரிமைகளில் ஐந்து ஏரியாக்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, கோவை ஏரியாக்களில் படத்தை வெளியிடும் உரிமை ரெட் ஜெயண்ட் மூவீஸுக்கு வழங்கப்பட்டுள்ளதால் வாரிசு – துணிவு இரண்டு படங்களும் தமிழகத்தில் சம அளவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
இராமானுஜம்
இந்த வாரம் OTT ரிலீஸுக்கு காத்திருக்கும் படங்கள்! லவ் டுடே முதல் வதந்தி வரை!
எதிரிகளின் வதந்திகளை அறுத்து எறிய வேண்டும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!