அஜித் நடித்துள்ள துணிவு மற்றும் விஜய் நடித்துள்ள வாரிசு ஆகிய திரைப்படங்கள் இன்று(ஜனவரி 11 ) வெளியாகின.
துணிவு திரைப்படத்தின் சிறப்பு காட்சி நள்ளிரவு ஒரு மணிக்கும், வாரிசு படத்தின் சிறப்பு காட்சி அதிகாலை 4மணிக்கும் தொடங்கியது.
அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படத்தின் சிறப்பு காட்சி நள்ளிரவு 1 மணிக்கு திரையிடப்பட்ட நிலையில், நேற்று இரவு முதலே அஜித் ரசிகர்கள் திரையரங்கில் கூட தொடங்கினர்.
முதல்காட்சியை வரவேற்கும் விதமாக அஜித்தின் பேனர்களுக்கு மாலை அணிவித்து, பால் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் செய்தும், பட்டாசு மற்றும் வாணவேடிக்கைகள் மூலம் உற்சாகம் காட்டினர்.
ஒரே நாளில் இரு முன்னணி நடிகர்களின் படங்களும் வெளியானதால் பல்வேறு திரையரங்கங்களிலும் விஜய், அஜித் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது இரு படங்களுக்கும் போட்டி போட்டுக் கொண்டு பேனர்கள், தோரணங்களை கட்டி ரசிகர்கள் வரவேற்றனர்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் துணிவு படம் நள்ளிரவு ஒரு மணிக்கும் வாரிசு திரைப்படம் அதிகாலை 4மணிக்கும் திரையிடப்பட்டது. இதையடுத்து இரு தரப்பு ரசிகர்களும் அதிகளவில் திரண்டனர்.
ஒருகட்டத்தில், திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த அஜித், விஜய் ஆகியோரின் பேனர்கள் கிழிக்கப்பட்டதால் இருதரப்பு ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
திரையரங்கில் அசாதாரண சூழல் நிலவியதை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதேபோல், கோவை மாநகர் பூ மார்க்கெட் வீதியில் அமைந்துள்ள அர்ச்சனா – தர்சனா திரையரங்கில் நள்ளிரவு 1மணிக்கு அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட இருந்தது.
இதனையொட்டி நூற்றுக்கணக்கான ரசிகர்கள் தியேட்டர் முன்பு திரண்டிருந்தனர்.
காவல்துறையினர் கூட்டத்தை தடியடி நடத்தி கட்டுப்படுத்த முயன்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ரசிகர்கள் தியேட்டர் கதவை உடைத்துவிட்டு திரையரங்குக்குள் நுழைந்தனர்.
இந்த நெரிசலில் முகப்பில் இருந்த கண்ணாடியும் படிக்கட்டு கம்பிகளும் உடைக்கப்பட்டன. காவல்துறையினர் தொடர்ந்து நடத்திய தடியடியிலும் கூட்ட நெரிசலிலும் சில ரசிகர்களுக்கு மண்டை உடைந்து ரத்த காயமும் ஏற்பட்டது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
திருப்பதி: சொர்க்கவாசல் தரிசனம் இன்றுடன் நிறைவு – நாளை முதல் இலவச தரிசன டிக்கெட்டுகள்!
பாவிகள். இவர்கள் எல்லாம் உருப்படுவார்களா? நாளைய நாட்டை எப்படி இவன்களை நம்பி ஒப்படைப்பது? எதற்கு லாயக்கு இவன்கள்?