”விஜய் மட்டுமல்ல, அஜித்தும் சூப்பர் ஸ்டார் தான்” சரத்குமார்

சினிமா

இவர் சூப்பர் ஸ்டார் இல்லை, அவர் சூப்பர் ஸ்டார் தான் என்று நான் சொல்லவில்லை என்றும் வாழ்க்கையில் சாதிக்கும் ஒவ்வொருவரும் சூப்பர் ஸ்டார் தான் எனவும் சரத்குமார் கூறியுள்ளார்.

வாரிசு மற்றும் துணிவு படங்கள் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ள நிலையில் தமிழகத்தில் விஜய் தான் நம்பர் 1 நடிகர், அஜித் அடுத்த இடத்தில்தான் இருக்கிறார் என தயாரிப்பாளர் தில் ராஜு பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து யார் நம்பர் 1 என இரண்டு தரப்பு ரசிகர்களும் சமூக வலைதளங்களில் மோதிக்கொண்டனர்.

இந்நிலையில் , பத்திரிகையாளர் பிஸ்மி என்பவர், விஜய் தான் ரியல் சூப்பர் ஸ்டார். ரஜினி முன்னாள் சூப்பர் ஸ்டார், தில் ராஜு சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. மக்கள் விஜய்யை அந்த இடத்தில் வைத்துவிட்டார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

அண்மையில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சரத்குமார், விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார், சூர்ய வம்சம் படத்தின் வெற்றி விழாவிலேயே இதனை நான் கூறினேன் என்று தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து ரஜினியின் சாதனைகளை பட்டியலிட்டு என்றும் ரஜினி தான் சூப்பர் ஸ்டார் என பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த சரத் குமார், நான் ரஜினி சார் சூப்பர் ஸ்டார் இல்லையென்று சொல்லவில்லை.

அஜித்குமார் சூப்பர் ஸ்டார் இல்லையென்று நான் சொல்லவில்லை. விஜய் சூப்பர் ஸ்டார் ஆவார் என்று தான் சொன்னேன்.

ரசிகர்களை கவர்கின்ற எல்லா நடிகர்களும் சூப்பர் ஸ்டார் தான்.

அமிதாப் பச்சனும், ஷாருக்கானும் , அஜித்குமாரும், விஜய் சேதுபதியும் சூப்பர் ஸ்டார்கள்தான்.

இவர் சூப்பர் ஸ்டார் இல்லை, அவர் சூப்பர் ஸ்டார் தான் என்று நான் சொல்லவில்லை. வாழ்க்கையில் சாதிக்கும் ஒவ்வொருவரும் சூப்பர் ஸ்டார் தான் என பேசினார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

டெல்லி விமான நிலையம்: பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

சிரிக்காமல் போட்டோ எடுத்து கொண்ட செல்ஃபிபுள்ள சமந்தா

+1
0
+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *