நடிகர் விஜய் இன்று (நவம்பர் 20) பனையூரில் ரசிகர்களிடம் என்ன பேசினார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் திரையுலகில் நடிகர் விஜய் பிசியாக பணியாற்றி வருகிறார். தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்னும் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் 2023 பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் நடிக்கவுள்ளார். இப்படித் தொடர்ந்து சினிமாதுறையில் பிசியாக உள்ள நடிகர் விஜய் நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மக்கள் இயக்க அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
செல்போன் உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. மேலும், கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரியாணி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பிற்பகல் 2 மணி அளவில் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்ட விஜய், மக்கள் இயக்க அலுவலகத்திற்கு வந்தபோது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட நடிகர் விஜய், சந்தித்த அனைவரையும் நலம் விசாரித்ததாக ரசிகர்கள் தெரிவித்தனர்.
2 மணி நேரச் சந்திப்பிற்குப் பிறகு நடிகர் விஜய் புறப்பட்டு சென்றார். தொடர்ந்து பேட்டி அளித்த விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தளபதி விஜய் ரசிகர்களைச் சந்தித்துப் போட்டோ எடுத்துக் கொண்டுள்ளார்.
இனிவரும் காலங்களில் அவருக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ மீண்டும் ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுப்பதாகக் கூறியிருக்கிறார்.
மாவட்ட தலைவர்கள் எல்லாம் தளபதி சந்திக்கவேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர். அதன்படி இன்று மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர், ஒன்றியம் நகர ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்தார்.
மேலும், ”முதலில் குடும்பத்தைப் பாருங்கள் அதற்கு அடுத்தபடியாக தொழிலைப் பாருங்கள். தொழிலில் கிடைக்கக்கூடிய வருமானத்தில் ஒன்று அல்லது இரண்டு சதவீதத்தில் ஏழை மக்களுக்குச் செலவு செய்யுங்கள், தயவுசெய்து கடன் வாங்கி செலவு செய்ய வேண்டாம்” என ரசிகர்களுக்கு அட்வைஸ் கூறியுள்ளார் விஜய்.
மோனிஷா
வாரிசு படம் வெளியீட்டு உரிமை யாருக்கு?
உதயநிதியோடு மோதும் விஜய்: பனையூர் சந்திப்பின் பாலிடிக்ஸ் பின்னணி!