வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 69’ படத்தின் பூஜை இன்று(அக்டோபர் 4) நடைபெற்றது.
பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்ஷ்ன்ஸ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 69’ படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு சில நாட்களாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு வருகிறது.
இதில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி எனப் பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
விஜய்யின் அரசியல் பிரவேசத்துக்கு முன்னர் நடிக்கும் கடைசி திரைப்படமாக இந்தப் படத்தை அறிவித்ததையடுத்து இப்படம் குறித்த ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கர்நாடக திரைப்பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க,சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் ராகவ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ளவுள்ளார்.சண்டை காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு படமாக்கவுள்ளார்.
முதற்கட்டமாக இந்தப் படத்தின் ஒரு பாடலை காட்சியை படமாக்க உள்ளனர். இந்தப் பாடல் காட்சியில் விஜய் – பூஜா ஹெக்டே இணைந்து நடிக்கவுள்ளனர்.
சில நாட்களாக இந்தப் படம் தெலுங்கில் நடிகர் பாலகிருஷ்ணா நடித்து வெளியான ‘பகவந்த் கேசரி’ திரைப்படத்தின் ரீமேக் என வதந்திகள் வெளியானது. ஆனால் நிச்சயம் அப்படி இருக்க வாய்ப்பில்லை என தமிழ் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்தப் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகுமெனவும் தங்களது எக்ஸ் பதிவில் கே.வி.என் புரொடக்ஷன்ஸ் தெரிவித்துள்ளது.
– ஷா
நாம் தமிழர் அவதூறு: எக்ஸ் வலைதள அதிகாரிக்கு நோட்டீஸ்… எஸ்.பி வருண் குமார் வழக்கில் உத்தரவு!
சென்னையில் இந்திய விமானப்படை தின சாகச நிகழ்ச்சி… எப்படி பார்ப்பது ?
‘வேட்டையன்’ படத்தில் நடிக்க ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு? அமிதாப்புக்கு இவ்வளவு தானா?