விஜய்யின் கடைசி படத்தின் விபரங்களை அதன் தயாரிப்பு நிறுவனம் நேற்று அறிவித்தபடியே இன்று(செப்டம்பர் 14) மாலை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டது.
நடிகர் விஜய் சில நாட்களுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாகவும், அவரது 69-வது படம்தான் அவரின் கடைசிப் படம் என்றும் அறிவித்திருந்தார்.
கடைசி படத்தின் இயக்குநர் எச்.வினோத் என்று சில தினங்களுக்கு முன் உறுதியான நிலையில், மற்ற விபரங்களுக்காக அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த கேவிஎன் புரொடக்ஷ்ன்ஸ் நிறுவனம் விஜய்யின் கடைசிப் படத்தின் விபரங்களை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தது.
அதன்படி இன்று மாலைபடத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டது தயாரிப்பு நிறுவனர்ம்.
அதில், ஜோதியை ஏந்திய கை ஒன்று தெரிகிறது. அதற்குப் பக்கத்தில் ” ஜனநாயகத்தின் தீபத்தை ஏந்திக்கொண்டு வருகிறவர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதில் படத்தின் இயக்குனர் எச் வினோத், இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர்களான வெங்கட் நாராயணா, ஜகதீஷ் பழனிசாமி, மற்றும் லோஹித் என்.கேவின் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தப் போஸ்டரை பார்த்தால், விஜய்யின் கடைசிப்படம் அரசியல் படம்தான் என்று தெரியவருகிறது.
அதில் “ஜனநாயகத்தின் சுடர் விரைவில் ஏற்றப்படும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த எந்த அறிவிப்பையும் படக்குழு வெளியிடவில்லை.
எனினும், சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரதமர் வீட்டில் புதிய உறுப்பினர் தீப ஜோதி
ராமேஸ்வரம் டூ தலைமன்னார்: கோவா கூட்டத்தில் முக்கிய கோரிக்கை வைத்த அமைச்சர் எ.வ.வேலு
திருமணத்துக்கு அழைக்காதது ஏன்?: ‘டான்’ டைரக்டர் பதில்!