லவ் யூ தங்கமே: நயனுக்கு வாழ்த்து தெரிவித்த விக்னேஷ் சிவன்

சினிமா

நடிகை நயன்தாராவின் பிறந்தநாளுக்கு அவரது கணவர் விக்னேஷ் சிவன் வாழ்த்து தெரிவித்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இன்று, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை மற்றும் லேடி சூப்பர் என்ற பட்டத்திற்குச் சொந்தக்காரரான நயன்தாராவின் பிறந்தநாள். இவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

பலரும் வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில் நயன்தாராவின் கணவர் விக்னேஷ்சிவன் அவருக்கு வாழ்த்து தெரிவித்து சில புகைப்படங்களையும் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

vignesh shivan wish nayanthara on her birthday by instagram

அவர், அந்த வாழ்த்துப்பதிவில், ”உன்னுடன் இது 9ஆவது பிறந்தநாள். ஒவ்வொரு பிறந்தநாளும் ஸ்பெஷல், மறக்கமுடியாது. ஆனால், அது எல்லாவற்றையும்விட இந்த ஆண்டு கணவன் – மனைவியாக இன்னும் ஸ்பெஷல். பெற்றோராக அழகான இரண்டு குழந்தைகள்.

vignesh shivan wish nayanthara on her birthday by instagram

நான் உன்னை ஒரு தைரியமான பெண்ணாகத்தான் எப்போதும் அறிந்திருக்கிறேன். நீ எதைச் செய்தாலும் நம்பிக்கையுடனும் அர்ப்பணிப்புடனும் செய்வாய்.

இத்தனை வருடங்களில் நான் ஒரு வித்தியாசமான நபரைப் பார்த்திருக்கிறேன். உன்னுடைய நேர்மையால் எப்போதும் ஈர்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

ஆனால் இன்று உன்னைக் குழந்தைகளின் அம்மாவாகப் பார்க்கிறேன். நீ முழுமையடைந்ததைப் பார்க்கிறேன். நீ இன்று மகிழ்ச்சியாக இருக்கிறாய். இன்னும் அழகாகத்தெரிகிறாய்.

vignesh shivan wish nayanthara on her birthday by instagram

குழந்தைகள் முத்தம் கொடுக்கும் என்பதால் நீ மேக்அப் கூட போடுவதில்லை. ஆனால், இத்தனை வருடங்களில் இப்படி ஒரு அழகை நான் பார்த்ததில்லை.

உன் முகத்தில் இருக்கும் புன்னகையும் மகிழ்ச்சியும் எப்போதும் இருக்க வேண்டும், அதற்காக வேண்டிக்கொள்கிறேன்.

நான் இப்போது செட்டில் ஆகிவிட்டதாக உணர்கிறேன்.

வாழ்க்கை அழகாக இருக்கிறது… திருப்தியாகவும் நன்றி நிறைந்து இருக்கிறது.
குழந்தைகளுடன் நம்முடைய பிறந்தநாளெல்லாம் இதுபோல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுகிறேன்.

vignesh shivan wish nayanthara on her birthday by instagram

நாம் அனைவரும் ஒன்றாக வளர்கிறோம்! எதிர்த்துப் போராடக் கற்றுக்கொள்கிறோம், அதேநேரம் சண்டையிட்டு மகிழ்கிறோம்.

கடவுளின் ஆசீர்வாதத்துடனும் பிரபஞ்சத்தின் சாட்சியத்துடனும் நமக்கு ஒரு அற்புதமான வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

இப்போதும் எப்போதும் லவ் யூ தங்கமே!” என்று பதிவிட்டு நயன்தாராவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.

மோனிஷா

விஜய்யின் வாரிசுக்காக களமிறங்கிய சீமான்

இந்தியா- நியூசிலாந்து டி20: மழையால் ரத்து!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *