விக்னேஷ் சிவனின் அடுத்த படம்: ஒருவழியா பூஜை போட்டாச்சு!
vignesh shivan lic movie
லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கப் போகும் படத்தில் பிரதீப் ஹீரோவாக நடிக்க போகிறார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அந்த தகவலை உறுதி செய்யும் வகையில் ஒரு அப்டேட் வெளியாகி உள்ளது.
காத்து வாக்குல இரண்டு காதல் படத்திற்கு பின் இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜித்குமார் படத்தை இயக்கப் போகிறார் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து அவர் விலகிக் கொண்டார்.
அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் 17 வது படத்தை இயக்கப் போகிறார் என்ற அறிவிப்பு வெளியானது. ஆனால் அந்த படமும் நடக்கவில்லை.
சிவகார்த்திகேயனுக்கு சொன்ன கதையில் தான் தற்போது பிரதீப் ரங்கநாதனை கதாநாயகனாக வைத்து விக்னேஷ் சிவன் இயக்க போகிறார். இந்த படத்திற்கு LIC – Love Insurance Corporation என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
விக்னேஷ் சிவன் பிரதீப் கூட்டணியில் உருவாக உள்ள இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். LIC படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
இன்று (டிசம்பர் 14) LIC படத்தின் பூஜை நிகழ்ச்சி மிகவும் எளிய முறையில் நடைபெற்றது. இந்த பூஜை நிகழ்ச்சியில் விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி, லலித் குமார், அனிருத் ஆகியோர் கலந்து கொண்டனர். பூஜை நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. கூடிய விரைவில் LIC படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
இது என்னடா புது அட்வைஸா இருக்கு: அப்டேட் குமாரு
செந்தில் பாலாஜி பண மோசடி வழக்கு: ஜனவரி 3-க்கு ஒத்திவைப்பு!
விழுப்புரம் பள்ளி மாணவி தற்கொலை – போலீசார் குவிப்பு: என்ன காரணம்?
vignesh shivan lic movie