ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று முழுமையாக நடைபெற பிரார்த்தனை செய்வதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசன் 16-வது கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இறுதி போட்டியில் நேற்று மோத இருந்தது.
குஜராத் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருந்த இறுதிப்போட்டியை காண கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருந்தனர். போட்டி நடைபெறும் இடத்தில் மழை குறுக்கிட்டதால் இரவு 7.30 மணி வரை டாஸ் போடாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்தது.
மழை சற்று குறையும் என்று பிசிசிஐ நிர்வாகிகள் எதிர்பார்த்த நிலையில் தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனால் இறுதிப்போட்டியை காண வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இந்தநிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அகமதாபாத் மைதானத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து “இறுதிபோட்டி இன்று முழுமையாக நடைபெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்” என பதிவிட்டுள்ளார். அவரது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
செல்வம்
அதிமுக மயில்…திமுக வான்கோழி: செல்லூர் ராஜூ புது விளக்கம்!
ஆளுநர் மீது வழக்குப்போட வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்