விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கி இருக்கும் திரைப்படம் ‘லியோ’. இந்தத்திரைப்படத்தில் பல வருடங்களுக்கு பிறகு, விஜய்யுடன் ஜோடியாக சேர்ந்து இருக்கிறார் நடிகை த்ரிஷா.இத்திரைப்படம் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பிற்கிடையே வரும் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இதற்கிடையே விஜய்க்கும் லோகேஷ் கனராஜிற்கும் இடையே சண்டை ஏற்பட்டதாகவும், பாதிப்படத்தை இயக்குநர் ரத்னகுமார்தான் முடித்தார் என செய்திகள் பரவிய நிலையில் அதற்கு லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் பதில் அளித்திருக்கிறார்.
அவர் தனது பதிலாக, ”நானும், விஜய் சாரும் சண்டை போட்டோம் என்ற செய்தி வெளியான போது, நானும் அவரும் தான், அதனை ஒன்றாக படித்து சிரித்துக்கொண்டிருந்தோம் என்றும், ஒவ்வொரு விஷயத்திற்கு நான் விளக்கம் கொடுத்து கொண்டிருந்தால், காலை ஆரம்பித்து இரவு வரை அதை மட்டும்தான் செய்து கொண்டிருக்க வேண்டும்” என்று பேசியிருந்தார்.
லோகேஷ் விளக்கம் கொடுத்த பின்னரும் இதனை வைத்து விஜய் ரசிகர்களுக்கு எதிராக சில நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
லைக் போட்டதால் சர்ச்சை!
இப்படி சத்யன் ராமசாமி என்ற ரஜினி ரசிகர் ஒருவர் பதிவிட்டிருந்த விஜய் – லோகேஷ் சண்டை பற்றி பதிவிட்டிருந்த ட்விட்டுக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் லைக் போட்டிருந்தார். இதனைக்கண்ட விஜய் ரசிகர்கள் அவரை டேக் செய்து கண்டனம் தெரிவித்த நிலையில் தனது லைக்கை டிஸ்லைக் செய்தார்.
#Leo படத்தில் @Dir_Lokesh மற்றும் @actorvijay அவர்கள் இருவருக்கும் நடந்த கசப்பான சம்பவத்தை வெளிச்சம் போட்டு காட்டிய என்னுடைய விளக்கப் பதிவை உண்மை அறிந்த @VigneshShivN அவர்கள் முதலில் லைக் செய்து பின்னர் நீக்கிய காரணம் என்னவோ… 😵🤔 pic.twitter.com/tVKnD0dxnI
— Sathyan Ramasamy (@SathyanRamasamy) October 8, 2023
மேலும் அதற்கான விளக்கத்தையும் அளித்து விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களிடம் தற்போது மன்னிப்பும் கேட்டுள்ளார்.
படிக்காமல் லைக் செய்துவிட்டேன்!
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், “அன்பான விஜய் சார் ரசிகர்களே, லோகி ரசிகர்களே … குழப்பத்திற்கு மன்னிக்கவும்.
குறிப்பிட்ட ட்விட்டின் கருத்தை பார்க்காமல், அதன்கீழ் பகிரப்பட்ட லோகியின் வீடியோவை மட்டும் பார்த்து லைக் செய்ததால் இந்த தவறு நடந்து விட்டது.
இதேபோன்று எனக்கு பிடித்த நயன்தாராவின் ஒரு காட்சி ட்விட்டரில் பகிரப்பட்ட போது அதற்கு மேல் பதிவிட்டிருந்த அவதூறு கருத்தை படிக்காமல் லைக் செய்துவிட்டேன். பின்னர் அது எனக்கு தெரியவந்தபோது அதற்காக வருந்தினேன்.
நான் கவனமாக இருந்திருக்க வேண்டும். இது என் பக்கத்திலிருந்து நடந்த ஒரு முட்டாள்தனமான தவறு! இதற்காக உலகம் முழுவதும் உள்ள அனைத்து நல்ல தளபதி ரசிகர்களிடமும் நான் எனது மன்னிப்பை தெரிவித்துக் கொள்கிறேன்.
லியோவை கொண்டாடுவோம்!
லோகியின் படைப்புகள் மற்றும் அவரது நேர்காணல்கள் மற்றும் அவர் பேசும் விதம் ஆகியவற்றின் பெரிய ரசிகன் நான்! தளபதி விஜய் சாரின் லியோ படத்தின் பிரமாண்ட வெளியீட்டிற்காக நானும் ஆவலுடன் காத்திருந்தேன்.
அதே போன்று அக்டோபர் 19 ஆம் தேதி பிளாக்பஸ்டர் படத்தைப் பார்க்க அதே உற்சாகத்துடன் காத்திருக்கிறேன்!
எனவே நீங்களும் எனது முட்டாள்தனமான தவறை குறித்து மேலும் கருத்து தெரிவிப்பதில் உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்.
வெளிவர இருக்கும் லியோ மற்றும் அதில் இடம்பெற்றுள்ள அனைத்து நல்ல வேலைகளையும் கொண்டாடுவோம்! ஜெய்ஹிந்த்!” என்று விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
எம்.எல்.ஏ.க்களுக்கு பூஸ்ட்: அமைச்சர்களுக்கு உதயநிதி வைத்த செக்!
World cup 2023: 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள்… பரிதாப இந்திய அணியை மீட்ட கோலி, ராகுல்