இரட்டை குழந்தைகளுடன் தல தீபாவளி… விக்கி – நயன்தாரா பகிர்ந்த க்யூட் வீடியோ!

சினிமா

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களது இரட்டை குழந்தைகளுடன் தீபாவளி வாழ்த்து கூறியுள்ள க்யூட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் வாடகைத் தாய் மூலம் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் இருவரும் இரட்டை குழந்தை பெற்றதை தங்களது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டனர்.

இருவருக்கும் திருமணமாகி 4 மாதமே ஆன நிலையில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றது எப்படி என்று கேள்வி எழுந்தது. அது தொடர்பான தமிழக அரசின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இருவரும் தங்களது இரட்டை குழந்தைகளை கையில் ஏந்தியபடி தீபாவளி வாழ்த்து தெரிவித்து அதனை சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

இதனை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ”உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! வாழ்க்கை உங்களுக்கு எதிராக வைத்திருக்கும் அனைத்து தடைகளுக்கு மத்தியிலும் அன்பான மனிதர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி மற்றும் அமைதி பெருக விரும்புகிறேன்.

அன்பே நாம் ஒவ்வொருவருக்கும் இருக்கக்கூடியது. அன்பு மட்டுமே இந்த வாழ்க்கையை அழகாகவும் வளமாகவும் மாற்றும்! கடவுள் மீது நம்பிக்கை வையுங்கள்.
நல்லது நடக்கும் என்பதை நம்புங்கள் மற்றும் பிரபஞ்சம் எப்போதும் எல்லாமே அழகாக மாறுவதை உறுதி செய்கிறது! என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனைதொடர்ந்து திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் விக்கி நயன்தாரா ஜோடிக்கு தல தீபாவளி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

பிரதமர் மோடியின் இந்தி வெர்சன் வீடியோவுக்கு ஏ.ஆர்.ரகுமான் பதில்!

கிரிக்கெட் உலகின் அசைக்க முடியாத அரசன்… யார் இந்த விராட் கோலி?

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *