உளுந்தூர்பேட்டை நாய்க்கு நாகூர் பிரியாணி என்றனர்… நயன்தாராவுடன் திருமணம் குறித்து விக்னேஷ் சிவன் 

Published On:

| By Kumaresan M

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் குறித்த ஆவணப்படம் வெளியாகியுள்ளது. இந்த ஆவணப்படத்தில் தனக்கும் நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்தது எப்படி என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் விக்னேஷ் சிவன்.

அதில், அவர் கூறியிருப்பதாவது, “நயன்தாரா தான் என்னை முதலில் காதலிப்பதாக சொன்னார். அதுவரை, மேடம் என்றே அவரை அழைத்து வந்தேன். இதனால், நயன்தாராவை பெயர் கூறி அழைப்பது எனக்கு சங்கடமாகவே இருந்தது. நயன்தாராவும் நானும் காதலிப்பதை அறிந்து கொண்ட பலரும் உளுந்தூர்பேட்டை நாய்க்கு நாகூர் பிரியாணியா ? என்றெல்லாம் கேலி பேசினர். இணையத்திலும் மீம் போட்டனர். அதாவது, என்னை போன்ற சாதாரண மனிதருக்கும் சூப்பர் ஸ்டாரான நயன்தாரா கிடைப்பதா? என்கிற ரீதியில் பலரும் விமர்சித்தனர்.

என்னை போன்ற ஒருவனிடத்தில் நயன்தாரா காதலில் விழுந்தது இப்போது வரை எனக்கு ஆச்சரியமாகவே உள்ளது. நயன்தாரா போன்ற ஒருவர் என் வாழ்க்கையில் வருவார் என்று நினைக்கவே இல்லை. அவர் என் வாழ்க்கையில் வந்த பிறகு அவ்வளவு நல்ல விஷயங்கள் நடந்தன. அப்போதெல்லாம் , சாதாரண பஸ் கண்டக்டராக இருந்தவர் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக உயரவில்லையா? என்றுதான் நான் மனதுக்குள் நினைத்து கொள்வேன்.

12 ஆம் வகுப்பு படிக்கும் போது எனது தந்தையை இழந்தேன். தாயையும் சகோதரியையும் பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் எனக்கு இருந்தது. அதே வேளையில், சினிமாவில் நுழைய வேண்டுமென்பது எனது லட்சியமாக இருந்தது. எனது தயார்தான் என்னை ஊக்கப்படுத்தி சினிமாவுக்குள் நுழைய வைத்தார். எனது தந்தை, தாய் இருவருமே போலீஸ் துறையில் வேலை பார்த்தனர். அவர்களின் அனுபவத்தை கொண்டுதான் நானும் ரவுடிதான் படத்தை எடுத்தேன்” என்று ஆவணப்படத்தில் கூறியுள்ளார் விக்னேஷ் சிவன்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

நடித்தது ஒரே படம்தான்… யார் இந்த ‘பதர் பதாஞ்சலி’ துர்கா?

இந்திரா காந்தி பிறந்தநாள்… கார்கே, ராகுல் மரியாதை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel