Video : ரோட்டர்டாமில் ’விடுதலை’- க்கு கிடைத்த உற்சாக வரவேற்பு!

Published On:

| By christopher

viduthalai screened at the International Festival

இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் சூரி, விஜய் சேதுபதி நடித்துள்ள விடுதலை 1 & 2 படம் நெதர்லாந்தில் நடைபெற்று வரும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வான செய்தி சமீபத்தில் வெளியாகி பெரும் பாராட்டுகளை பெற்றது.

இந்நிலையில் நெதர்லாந்தில் நடைபெறும் ரோட்டார்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் சூரி நெதர்லாந்து சென்றார். அங்கு சூரி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

ரோட்டார்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் விடுதலை படம் திரையிடப்பட்ட பிறகு, படம் பார்த்த ரசிகர்கள் 5 நிமிடங்களாக எழுந்து நின்று கைதட்டி தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.

மேலும் படம் பார்த்த ரசிகர்களுடன் வெற்றிமாறன், விஜய் சேதுபதி மற்றும் சூரி  எடுத்துக்கொண்ட புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கார்த்திக் ராஜா

ஹேமந்த் சோரன் கைது: ஸ்டாலின் ரியாக்‌ஷன்!

பட்ஜெட்: வந்தே பாரத் ரயில்களை அதிக எண்ணிக்கையில் இயக்க முடிவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share