விடுதலை – பாகம் 1 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று (மார்ச் 20 ) வெளியாகி உள்ளது.
எழுத்தாளர் ஜெயமோகனின் ’துணைவன்’ என்கிற சிறுகதையை மையமாக வைத்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே உருவாகியுள்ள படம் ‘விடுதலை பாகம் 1’.
விஜய் சேதுபதி, சூரி, ராஜீவ் மேனன், கௌதம் மேனன், சேத்தன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக இந்தப் படம் வெளியாக உள்ளது.
இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். ஆர்எஸ் இன்போடெயின்மெண்ட் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.
’விடுதலை பாகம் 1’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் படம் இந்த மாதத்துக்குள் வெளியாகும் என இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் கூறி இருந்தார்.
இந்நிலையில், இன்று ( மார்ச் 20 ) ’விடுதலை பாகம் 1’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, வரும் மார்ச் 31ஆம் தேதி ’விடுதலை பாகம் 1’ படத்தின் முதல் பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பட்ஜெட் – மின்மினிப் பூச்சியல்ல உதயசூரியன்: மு.க.ஸ்டாலின்
“மகளிருக்கு ஆயிரம்…வெத நான் போட்டது”: கமல்