தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த நடிகர் சூரி, வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
அடுத்ததாக விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிகர் சூரி நடித்திருக்கிறார். அதனை தொடர்ந்து கொட்டுக்காளி, கருடன் ஆகிய படங்களிலும் ஹீரோவாக நடித்துள்ளார்.
மேலும், சமீபத்தில் சூரி நடித்துள்ள வெற்றிமாறனின் விடுதலை 1 & 2 மற்றும் ராமின் ஏழு கடல் ஏழு மலை ஆகிய படங்கள் நெதர்லாந்தில் நடைபெறும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வான செய்தி வெளியாகி பெரும் பாராட்டுகளை பெற்றது.
இந்நிலையில், நெதர்லாந்தில் நடைபெறும் ரோட்டார்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் சூரி நெதர்லாந்து சென்றுள்ளார்.
நெதர்லாந்தில் விழா நடக்கும் அரங்கிற்கு வெளியே நடிகர் சூரி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சர்வதேச திரைப்பட விழாவில் சூரி நடித்துள்ள படங்கள் திரையிடப்படும் செய்தி அறிந்த ரசிகர்களும் திரையுலகினரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“ரஜினி சார் தைரியம் யாருக்கும் வராது”: விஷ்ணு விஷால்
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: தமிழகம் முழுவதும் இன்று தொடங்குகிறது!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
பியூட்டி டிப்ஸ்: சருமம் பளபளக்க… வீட்டிலேயே வெந்தய பேக்!