சர்வதேச திரைப்பட விழாவில் வெற்றிமாறனின் விடுதலை!

சினிமா

54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நவம்பர் 20-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ள படங்களின் லிஸ்ட் தற்போது வெளியாகி இருக்கிறது.

இந்த லிஸ்ட்டில் இயக்குனர் வெற்றிமாறனின் “விடுதலை 1”, இயக்குனர் மணி ரத்னத்தின் “பொன்னியின் செல்வன் 2”, மற்றும் இயக்குனர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனின் “காதல் என்பது பொதுவுடமை” ஆகிய மூன்று தமிழ் படங்கள் Mainstream Cinema பிரிவில் திரையிட தேர்வாகி உள்ளது.

மேலும் 2018, கந்தாரா, தி வாக்சின் வார், இரட்டா, தி கேரள ஸ்டோரி, நீல நிற சூரியன், காதல்: The Core உள்பட மொத்தம் 25 படங்கள் திரையிட தேர்வாகி உள்ளது.

Non feature film பிரிவில் தமிழ் மொழியில் இருந்து பிரவீன் செல்வம் இயக்கிய உள்ள ‘நன்செய் நிலம்’ படம் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.

– கார்த்திக் ராஜா

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

கவுதமியோடு பேசிக்கொண்டிருக்கிறேன் : அண்ணாமலை

தினமும் ஆவி பிடித்தால் முகம் பளப்பளப்பாகுமா?

சைலேந்திர பாபு நியமன பரிந்துரை : ஆளுநர் மீண்டும் நிராகரிப்பு?

திருமாவளவன் அண்ணாமலை சந்திப்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *