இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி நடிக்கும் ‘விடுதலை – 2’ படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி குறித்த தகவலை அப்படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ’தினம் தினமும்’ எனும் இந்தப் பாடல் வருகிற நவ.17ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தில் மஞ்சு வாரியர், சேத்தன், பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், இளவரசு, பாலாஜி சக்திவேல், சரவண சுப்பையா, மூணாறு ரமேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை ராமர் படத்தொகுப்பு வேலைகளை மேற்கொண்டுள்ளார். ஆர்.எஸ்.இன்ஃபோடெய்ண்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தத் திரைப்படம் ஏற்கனவே ராட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது.
கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான ‘விடுதலை -1’ திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. விமர்சன ரீதியாகவும் மிகுந்த பாராட்டுகளைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான ‘விடுதலை -2’ விரைவில் வெளியாகும் என அப்போதே அறிவிக்கப்பட்டது.
இந்த இரண்டாம் பாகத்தில் விஜய்சேதுபதியின் ‘வாத்தியார்’ கதாபாத்திரத்தின் மூலக் கதை பெருமளவில் இடம்பெறும் எனத் தெரிகிறது.
சமீபத்தில் இந்த ‘விடுதலை – 2’ படத்தின் டப்பிங் வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் திரைப்படம் வருகிற டிச.20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
மனநலம் பாதிச்சிருச்சு, படத்தை பார்த்து கத்திய ரசிகர்!- கங்குவா கதறல்கள்!
”இன்றே பேசுங்கள்” : ஜெயம் ரவி, ஆர்த்திக்கு நீதிமன்றம் உத்தரவு!